மாணவர்களுக்குப் பயனாகுகிற அகரமுதலிகள்
(இணையத்தில் மட்டுமே இயங்குபவை)

தமிழம்.வலை புதியதாகத் தொடங்கியுள்ள அகராதி இது. நாம் பேசுகிற சொற்கள் தமிழ்ச் சொற்கள் தானா ? என்று கண்டறிய இந்த அகராதி பயனாகும். சமற்கிருதம், உருது, அரபி எனப் பல அயற்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. இவற்றை நீக்கித் தமிழைத் தமிழாகப் பேச இந்த அகராதியைப் பயன்படுத்திக் கொள்க.


60 க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்தாலும் அதனை மொழிமாற்றம் செய்யப் பயனாகுகிற அரிய அகராதியை கூகிள் வடிவமைத்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை முறைப்டுத்திக் கொண்டு ஒருங்குறியில் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய மொழி மாற்றத்தை உடனடியாக அருகிலுள்ள கட்டத்திற்குள் காட்டுகிறது. தமிழ் மொழியையும் இந்த மொழிமாற்ற மென்பொருளில் இணைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே.
மாணவர்கள் தாங்கள் விரும்புகிற சொற்களை வலது புறத்தில் உள்ள கட்டத்தினுள் தட்டச்சு செய்து சொடுக்கினால் இடது புறத்தில் அதற்கான தமிழ்ச் சொல் தோன்றும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்தச் சொற்களை இது படித்தும் காண்பிக்கும். முதல் நிலை மாணவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.


இந்தத் தமிழ் லெக்சிகன் அகராதியில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய பொருள் தோன்றுகிறது. வேர்சொல்லில் அமைந்த வேறு வேறு பொருளுடைய சொற்களையும் இணைத்துள்ளது. ஆய்வாளர்களுக்குப் பயனாகுகிற வகையில் அமைந்த அகராதி இது.


அகராதியில் உள்ள பட்டியலின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து, அந்த எழுத்தில் இணைக்கப்பட்டுள்ள சொற்களைச் சொடுக்கினால் அதற்குரிய பொருள் வருகிறது. மாணவர்களுக்குப் பயனாகும் அகராதி இது.


அகராதியில் உள்ள இடத்தில் ஆஙகிலத்தில் சொற்களைத் தட்டச்சு செய்து தேடினால், அந்தச் சொல்லுக்கான பொருள் தோன்றுகிறது. மாணவர்களுக்கும் பயனாகும் அகராதி இது.


விருபா மிகவும் திட்டமிட்டு, கட்டமைப்புடன் கூடிய தரவுதளமாக இந்த அகராதியை அமைத்துள்ளது. இதன்வழி அறிவியல் அணுகுமுறையுடன் பல பகுப்பாக்கங்களைச் செய்யவதற்கான படி நிலையைக் காணலாம். இந்த மின்-அகராதியானது, அச்சடிக்கப்பட்ட அகராதிகளில் காணப்படாத ( Reverse Lookup ) தலைகீழாக அல்லது மறுதலையாகப் பார்த்துக் கொள்ளும் வசதியையும் தருகிறது. அனைத்துச் சொற்களையும் குவியலாக்கி, ஓரிடமாகக் காண்பிக்கும் பேரிணையம் ஒன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகவும் இதனைக் கொள்ளலாம்.