|

தமிழம் வலை
ஆசிரியர்
பொள்ளாச்சி நசன்
|
அன்புடையீர் - வணக்கம்.
ஒவ்வொரு முறை வலையேற்றும் பொழுதும், பல்வேறு பகுதியிலிருந்தும் ஒருங்குறியில் தமிழம் வலையை, வலையேற்றினால்தான் சிறப்பு என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். தமிழம் வலையின் தமிழ் கற்பித்தல் பாடங்களும், தமிழம் வலையின் நூல்கள் பாதுகாப்பான - நாள் ஒரு நூல் - வலையேற்றமும் ஒருங்குறியில் மாற்றப்பட்டு வலையேற்றப்பட்டு விட்டன. அதற்கான வேலைப்பளு கூடியதால் தமிழம் வலையின் உயிர்த் துடிப்பான பகுதிகளை மட்டும் வரிசைப் படுத்தி அதனை ஒருங்குறியில் ஏற்றினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவாகவே இந்த ஒருங்குறி வலை. இனிவருபவை இவ்வாறே வரும். ஒரு திங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டியவைகள் வரிசையாக வெளியிடப்படும். ஒவ்வொரு திங்களும் வலையேற்றுபவை அப்படியே இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் காணலாம். மேலும் பழைய திசுக்கியில் வலையேற்றியவையும் அப்படியே இருக்கும். பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க வடிவமைக்கப்பட்ட ஒருங்குறியிலமைந்த தமிழம் வலை பற்றிய உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.
பொள்ளாச்சி நசன் 4-11-2008
|