அன்புடையீர் - வணக்கம்.
தமிழம் வலையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பது, மகிழ்வாக இருக்கிறது. சோர்வு நீங்கி புத்துணர்வு மிகுகிறது. ஒருங்குறியைப் பார்த்து மகிழ்ந்து தொடர்க என்று வாழ்த்தியவர்கள் பலர். அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள். தமிழம் வலையில் புதிய இணைப்பாக - நாள் ஒரு நூல் - என்ற பகுதியானது இணைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக நான் சேகரித்து வைத்த இதழ்களை, நூல்களை - படவடிவக் கோப்பாக மாற்றி - அனைவரும் இலவயமாக வலையிறக்கிப் படிக்கிற வகையில் நான் வலையேற்றுவது - மகிழ்வாக இருக்கிறது. இதற்குப் பல வகையிலும் உதவுகிற நண்பர்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுணர்வோடு வெளியான அனைத்து நூல்களையும், இதழ்களையும் உலகமே பார்த்து மகிழும் வகையில் வலையேற்றுவோம். நண்பர்களோடு தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக் கொடுங்கள். நம் தமிழ் நூல்கள் வரும் தலைமுறையினருக்காகப் பாதுகாத்து, காட்சிப் படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். பழைய, புதிய நூல்களை ஆசிரியரிடமிருந்து கையெழுத்துடன் பெற்று அனுப்பவும். என்னிடம் உள்ள அனைத்து இதழ்களையும் தொடர்ந்து மின்நூலாக்கத் தி்ட்டமிட்டுள்ளேன். அன்புடன்,
பொள்ளாச்சி நசன் 7-12-2008
தமிழ் படிக்க உதவுகிற தமிழம் வலையை நம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.