வாழையடி வாழையென
வந்த தமிழ் மக்கள்
|
|
மக்களாட்சி என்பது மக்களை மக்களே ஆளுவது என்பது தானே.
மக்களில் வேறுபாடு கண்டு ஒரு கண்ணில் ஈட்டி பாய்ச்சுவது எதனால் ? அடிப்டையிலேயே நிறைய குளறுபடிகள் மூளையில்
ஏற்றப்பட்டு உள்ளன. அவை கண்டறியப்பட்டு மனிதனாக மேலெழக் கூடாது என்பதற்காகவே இலவசங்கள், சலுகைகள்,
கண்துடைப்புகள், போதைகள், மயக்குமொழிகள், வெவ்வேறு வாய்கள் வழி வந்து கொண்டிருக்கின்றன.
எது சரி ? எது தவறு ? என்று சிந்திக்கும் திறன் இழந்த, ஆட்டு மந்தைகளாய் மக்கள் மாற்றப்படும் பொழுது அவர்களது வாய்
திறவாது. இந்த நுட்பத்தை எத்தனை ஆண்டுகளுக்கு வண்ண வண்ண சொற்களில் வகை வகையாய் நிகழ்த்திக் காட்டுவது. நேற்று
நடந்ததை இன்று மறந்து விடுகின்றான். தன்நலத்தோடு வாழும் மனிதனாய் மாற்றப்பட்ட இவன் எப்படித் தெளிவாகச் சிந்திப்பான்...
மழலையிலிருந்தே மூளைச்சலவை செய்யப் படுகிறான். தொடரும் அனைத்துச் சூழலும் அவனை அப்படியே வளர்த்தெடுக்கிறது.
எப்படி இவனிடம் மாபெரும் ஆற்றலும், நுட்பமும் கிளர்ந்து எழும்...அறுபது ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் அடைய பட்டபாடும்,
சிந்திய இரத்தமும், உயிர் ஈகமும் இதற்காகவா ? கையேந்தி நிற்கவா ? விடுதலைப்போரின் ஈகத்தையும் நாட்டுப்பற்றையும்
மனித நேயத்தையும் உணர்ந்தவர்களால்தான் மக்களை மேலெழச் செய்ய முடியும்,
மேலெழத் துடித்து ஈகம் புரியும் மக்களால்தான் நாடு மேலெழும்.
அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 14.3.09
|