5
அறிவிலும் ஆற்றலிலும் கூர்மை உடைய தமிழகத் தமிழனை மழுங்கடிப்பது எது ? கண்டறிந்து விலக்காதவரை விடிவு இல்லை.
வாழையடி வாழையென
வந்த தமிழ் மக்கள்



அன்புடையீர் - வணக்கம்.

நெஞ்சு வெடிக்கிறது. வருகிற ஒவ்வொரு செய்தியும், ஈழத் தமிழர்கள் படுகிற இன்னல்களும் வேதனையை ஆக்குகிறது. இன அழிப்பு என்பதனை பல்வேறு பொய்களைக் கூறி அழிக்கத் தொடங்கியுள்ளது சிங்கள அரசு.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் தமிழ் மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். சொந்த மண்ணில், வாழ்ந்த மண்ணில், வாழ விடாது ஓட ஓட விரட்டுகிற இராணுவ நடவடிக்கைகளை எப்படித் தாங்குவது ?

காவல்துறை, நீதித்துறை, போக்குவரத்துத் துறை, மரபு வழியிலான இராணுவம் என நாட்டிற்கான அத்தனை முறைப்படுத்தல்களுடன் ஆளுமை செய்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பல்வேறு பொருண்மிய மேம்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த போதிலும் சர்வதேசம் ஈழத்தை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. திட்ட மிட்ட சதியால் நாட்டிற்கான அர்பணிப்பு என்பது தீவிரவாதமாகத் திசை திருப்பப் பட்டு, அரச பயங்கரவாதம் தலை தூக்கித் தொடருகிறது. நெஞ்சு வெடிக்கிறது

அன்புடன் - பொள்ளாச்சி நசன் -

வந்த இதழ்கள்


வந்த படைப்புகள்

தமிழம் வலையின் பார்வையாளரான நீங்கள் படைப்பாளியா ? உங்களின் தரமான படைப்பாக்கங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் படைப்புகள் பொழுது போக்கிற்கு எழுதுபவையாக இருக்க வேண்டாம். எழுத்தும் ஒரு கருவி என்ற உணர்வோடு, சமூக அவலங்களை, நெருக்குதல்களை, மனிதம் சீரழிக்கப் படுவதை இலக்கியப் பதிவாக எழுதி அனுப்புங்கள். தரமான படைப்புகள் இந்தப் பக்கத்தில் வலையேற்றப்படும்.... [ உள்ளே ]

பழைய இதழ்கள்


கிடைத்தற்கரியவை

கல்வி என்றால் என்ன ? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் ? இன்றைய பாடத்திட்டம் எப்படி இருக்கிறது ? இந்தக் கல்வி முறை மாணவர்களை சிந்திக்கும் திறன் உள்ளவர்களாக மாற்றுமா ? ஏழை மாணவரின் இன்றைய நிலை என்ன ? அறிவியல் நோக்கொடு புதியன கண்டறியும் ஆராய்ச்சியாளர்கள் இங்கு தோன்றுவார்களா ? இதற்கு விடையாக இருக்கும் பரிசுபெற்ற குறுநாவல் இது, வலையிறக்கிப் படித்து மகிழவும். [உள்ளே]




தமிழ் நாள் காட்டிகள்

தெளி தமி்ழில் பேசுவது, தமிழ்ப் படிக்கத் தெரிவது என்பவற்றோடு தமிழ்த் திங்களையும் தமிழ் எண்ணையும், தமிழ் எண்ணிலமைந்த நாள் காட்டியையும் அறிந்து கொள்வது தமிழ் உணர்வூட்டுவதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாள்காட்டியை அச்சாக்கி விற்பனை செய்வது என்பது அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 6 வகையான நாள் காட்டி வெளியிடப் பட்டது. இந்த ஆண்டும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு வெளியிடும் நாள் காட்டி பற்றிய குறிப்புகளை வெளியிடுவதற்காகவே இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்....[உள்ளே]

புகைப்படப் பக்கம்



நடக்கிற நிகழ்வுகளை,
பார்க்கிற அரிய
காட்சிகளை,
புகைப்படமாக்கி
எமக்கு அனுப்பவும்.
இவை
ஆவணங்களாகி
வரலாற்றைச்
சொல்லட்டும்.... [உள்ளே]
கேட்டு மகிழ்ந்தவை

உலகின் திசை நாலும்
அலைந்ததடா
தமிழ் ஈழப்பறவை
ஒவ்வொரு நொடியும்
நினைந்ததடா
தன் தாய் மண்ணின் உறவை
ஏதிலியாய்ப் பறந்து திரிந்ததடா
- பறவை -
இரவும் பகலும் கண்ணீர் சொரிந்ததடா....

வந்த மின்அஞ்சல்கள்


ஐயா, வணக்கம். தங்கள் வலைத்தளத்தைப் பற்றி நான் கருத்துக் கூறுவதா? தங்கள் தளத்தின் முகப்பில் உள்ள குழந்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறதே ! தங்கள் தளத்தைப் பார்த்த பின் நானும் அப்படித்தான் ஆகிப் போனேன்..... [உள்ளே]

...