6
தமிழ் வாழ.... தமிழன் வாழ வேண்டும்.... தமிழனாய் வாழ வேண்டும்.... தமிழனுக்காக வாழ வேண்டும்.... தமிழ் நிலத்தில் வாழ வேண்டும்.



அன்புடையீர் - வணக்கம்.

ஒவ்வொரு திங்களும் தமிழம் வலையின் ஒருங்குறிப் பக்கத்தை வடிவமைத்து வலையேற்றுவது என்பது எளிமையானதாக மாறிவிட்டது. படைப்பாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் உதவுவது நிறைவாக இருக்கிறது. வலைப் பக்கத்தை உடனே வடிவமைக்க உதவி செய்கிறது.

நம் அருகிலேயே நம் தமிழ் மக்கள், நம் தொப்புள் கொடி உறவுகள்... ஈழ மண்ணில் சொல்லொணாத் துயரம் அடைவது கேட்டும், பார்த்தும் நெஞ்சு வெடிக்கிறது. உலகத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் வீசியும், நச்சுக் குண்டுகள் வீசியும் அழிக்கப்டுகிற செய்தி அறிந்து தடுமாறுகிறோம். பிஞ்சுக் குழந்தைகள், மழலையர்கள், சிறுவர்கள் அழிக்கும் செய்தி அமிலமாக நுழைகிறது. கர்ப்பிணிப் பெண்களும், அகவை முதிர்ந்தவர்களும் உறுப்பிழந்து கிடப்பது கண்டு செய்வதறியாது திகைக்கிறோம். மனிதம் தொலைந்து போன மாக்களோடு எப்படி இணைந்து வாழ்வது. எது பாதுகாப்பான பகுதி. உலக அறிஞர்கள் இதற்கு விடை சொல்ல வேண்டும். உலகம் மட்டும் அல்ல இந்தியாவும் தான்.

அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 14.4.09

கேட்டு அழுதவை

என்ன நடக்குதுன்னு
எஞ்சனமே தெரியலையா - இங்கே
கொன்னு குவிக்கிறது - உன்
சொந்தமின்னு புரியலையா

எல்லாரும் செத்தாத்தான்
எழவுக்கு வருவீகளா
நாங்க கொத்தோடு செத்தாத்தான்
கோடிகொண்டு வருவீகளா

பழைய இதழ்கள்
....( உள்ளே )

வந்த இதழ்கள்


வந்த படைப்புகள்

தமிழம் வலையின் பார்வையாளரான நீங்கள் படைப்பாளியா ? உங்களின் தரமான படைப்பாக்கங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் படைப்புகள் பொழுது போக்கிற்கு எழுதுபவையாக இருக்க வேண்டாம். எழுத்தும் ஒரு கருவி என்ற உணர்வோடு, சமூக அவலங்களை, நெருக்குதல்களை, மனிதம் சீரழிக்கப் படுவதை இலக்கியப் பதிவாக எழுதி அனுப்புங்கள். தரமான படைப்புகள் இந்தப் பக்கத்தில் வலையேற்றப்படும்.... [ உள்ளே ]

கிடைத்தற்கரியவை

தமிழ் மழலையர்களுக்கு......,
தமிழ் / தமிழனின் வரலாறு சொல்லிக் கொடுப்பதற்கு அருமையான நூல் இது. ந.சி. கந்தையா பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட 96 பக்க நூலிது. நமது தாயகம், நம் முன்னோர், குமரிநாடு, நாவலந்தீவு, மொகஞ்சோதரா தமிழர், எகிப்தியர், சுமேரியர் என 35 தலைப்புகளில் தமிழர் வரலாறு காட்டுகிற அரிய நூல். (தமிழம் வலையின் நாள் ஒரு நூல் பகுதியில் 468 ஆவது நூல்)
[வலையிறக்கிப் படிக்கவும்....(3.21 MB)....]




தமிழ் நாள் காட்டிகள்

தெளி தமி்ழில் பேசுவது, தமிழ்ப் படிக்கத் தெரிவது என்பவற்றோடு தமிழ்த் திங்களையும் தமிழ் எண்ணையும், தமிழ் எண்ணிலமைந்த நாள் காட்டியையும் அறிந்து கொள்வது தமிழ் உணர்வூட்டுவதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாள்காட்டியை அச்சாக்கி விற்பனை செய்வது என்பது அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 6 வகையான நாள் காட்டி வெளியிடப் பட்டது. இந்த ஆண்டும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு வெளியிடும் நாள் காட்டி பற்றிய குறிப்புகளை வெளியிடுவதற்காகவே இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்....[உள்ளே]

புகைப்படப் பக்கம்

நடக்கிற நிகழ்வுகளை,
பார்க்கிற அரிய
காட்சிகளை,
புகைப்படமாக்கி
எமக்கு அனுப்பவும்.
இவை
ஆவணங்களாகி
வரலாற்றைச்
சொல்லட்டும்.

வந்த மின்அஞ்சல்கள்


அய்யா நசனுக்கு வணக்கம். நான் செளந்தரிடமும், செழியனிடமும் இதைப்பற்றி பேசி இருந்தேன். நான் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் 30 குழந்தைகள் தமிழ் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு வகுப்புகளில் சொல்லி கொடுப்பதை தவிர்த்து வீட்டில் பெற்றோர்களின் உதவியுடன் தமிழ் படிக்க சுலபமான புத்தகங்கள் தேவைப்படுகிறது .....[உள்ளே]

...