சுதந்திர நாட்டில், விதைத்த பிரித்தாளும் சூழ்ச்சி, வளர்ந்து மரமாகி, விழுது விட்டுக் கிளைத்துக் கிடக்கிறது வல்லரசுக் கனவுகளோடு.
அன்புடையீர் - வணக்கம்.
கம்பி வேலிகளுக்குள் நம் தமிழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். எமது ஊர், எமது வீடு, எமது சுற்றம் என மகிழ்வோடு வாழ்ந்தவர்கள் இன்று அனைத்தையும் இழந்து, கையேந்தி நிற்கிற அவலநிலை. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. ஆனால் வந்து விட்டது. நேரில் பார்க்கிறோம். பொருளாதார மேலாண்மை, இன ஆதிக்கம், ஆணிவேரறிந்து வேரறுத்து விட்டோம் என்ற வல்லரசுக் கனவுகளில் மிதந்து கொண்டு அரசாங்கங்கள் கீழறுப்பு வேலைகளில் இயங்குகின்றன. 1983 முதல் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை வகையான கொடுமைகள். கொஞ்சம் கொஞ்சமாக இன அழிப்புகள். ஈழ மண்ணில் இணைந்து வாழ இயலாது என்ற நிலைப்பாட்டுடன் தொடங்கப்பட்ட எதிர்ப்புக் குரல், அதற்கான காரணங்களும், சூழல்களும் அப்படியே இருக்க, ஒரு தலைமுறை நகர்விற்குப் பிறகு, இணைந்து வாழ இயலும் என்பது எப்படிச் சாத்தியமாகும்.
எப்படித் தாங்குவது இதை எப்படித் தாங்குவது ஈழதேசம் எதிரி கையில் எப்படித் தாங்குவது இரண்டு விழியில் நெருப்பிருக்கு எப்படித் தூங்குவது உதிரமெல்லாம் அமிலம் போல கொதி கொதிக்கிறதே எங்கள் உயிர் முழுதும் ஏக்கம் என்னும் அனல் அடிக்கிறதே
அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 9.8.09
கிடைத்தற்கரியவை
அச்சாகி வெளிவந்த நூல்களில் உடைந்து போகும் நிலையில் உள்ள பழைய நூல்களைப் படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கும் முறையை அறிந்து தமிழம் வலையில் உள்ள நாள் ஒரு நூல் என்ற பகுதியில் பாதுகாத்து வருகிறேன். அதில் உள்ள இரண்டு நூல்கள் இங்கே உள்ளன. இன்று வரை தமிழம் வலையில் 810 பழைய இதழ்கள் / நூல்களை நாள் ஒரு நூல் பகுதியில் வலை ஏற்றி உள்ளேன். படவடிவக் கோப்புகளை வலையிறக்கிப் பயன்படுத்தவும்
1903 நாலடியார் மூலமும் உரையும் நூல்
(18.4 MB)
1936 குடியரசு வார இதழ் பெரியார்
(5.23 MB)
பழைய இதழ்கள்
வந்த இதழ்கள்
வந்த படைப்புகள்
தமிழம் வலையின் பார்வையாளரான நீங்கள் படைப்பாளியா ?........ உங்களின் தரமான
படைப்பாக்கங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்....... உங்கள் படைப்புகள் பொழுது போக்கிற்கு
எழுதுபவையாக இருக்க வேண்டாம்...... எழுத்தும் ஒரு கருவி என்ற உணர்வோடு,
சமூக அவலங்களை, நெருக்குதல்களை, மனிதம் சீரழிக்கப் படுவதை இலக்கியப் பதிவாக
எழுதி அனுப்புங்கள்......... தரமான படைப்புகள் இந்தப் பக்கத்தில் வலையேற்றப்படும்....
[ உள்ளே ]
வந்த மின்அஞ்சல்கள்
ஜூலை இருபத்தொன்பது புதன் இரவு பதினொரு மணி எமது பெரு மதிப்புக்குரிய பொள்ளாச்சி நசன் அவர்கட்கு வணக்கம், தாங்கள் தமிழர்களுக்கு கிடைத்த விலை மதிப்பு அற்ற பொக்கிஷம். புதிய தொடர்பு சாதனத்தை எமது மொழி வளர்ச்சிக்கு பிரமாதமாகவும் பயனுள்ள முறையாகவும் பாவிப்பது பாராட்டுக்கு உரியதாகும். தங்கள் சேமிப்புமுறை, எதையும் நொடிப் பொழுதில் அணுகும்முறை வியப்பு அளிப்பதாக உள்ளது . தங்கள் சேவை மேலும் சிறப்புற எமது வாழ்த்துகள்.
அன்புடன் ...... வி.சிவசுப்ரமணியம் சிசெல்ஸ்
.....[உள்ளே]
தமிழ் நாள் காட்டிகள்
தெளி தமி்ழில் பேசுவது, தமிழ்ப் படிக்கத் தெரிவது என்பவற்றோடு தமிழ்த் திங்களையும் தமிழ் எண்ணையும், தமிழ் எண்ணிலமைந்த நாள் காட்டியையும் அறிந்து கொள்வது தமிழ் உணர்வூட்டுவதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாள்காட்டியை அச்சாக்கி விற்பனை செய்வது என்பது அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 6 வகையான நாள் காட்டி வெளியிடப் பட்டது. இந்த ஆண்டும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு வெளியிடும் நாள் காட்டி பற்றிய குறிப்புகளை வெளியிடுவதற்காகவே இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்....[உள்ளே]