சூடாமணி நிகண்டு
மக்கட்பெயர்த்தொகுதி

முனிவர் பெயர்

துறவர், சார்பில்லோர், நீத்தோர், தவர், முனைவர், மெய்யர், அறவர், மாதவர், கடிந்தோர், அந்தனர், அடிகள், ஐயர் உறுவர், தாபதர், இருடிகள், உயர்ந்தோர், யோகர், அறிஞர், பண்ணவர், அருந்தவர்,

சமணநீத்தோர் பெயர்

செளமியர், யோசர், திகம்பரர்

சைவர் பெயர்

மாவிரதியர், பாசுபதர், காளாமுகர்

மால்சமயத்தோர் பெயர்

பாகவதர்

புத்தர் பெயர்

சீவகர், பெளத்தர், தேரர், சாக்கியர்

சடைமுடித்த படிவர் பெயர்

தாபதர்

அகத்தியன் பெயர்

கும்பயோனி, குறுமுனி

மறையவர் பெயர்

ஐயர், வேதியர், நூலோர், அறுதொழிலாளர், ஆய்ந்தோர், பூசுரர், தீவளர்ப்பவர், தொழுகுலத்தோர், அந்தணர், ஆதிவருணர், முப்புரிநூன்மார்பர், மெய்யர், விப்பிரர், வேதபாசகர், வேள்வியாளர், வேள்வியாளர், இருபிறப்பாளர், பார்ப்பார், மேற்குலர், உயர்ந்தோர்,

பிராமசாரியின் பெயர்

வன்னி

அரோணாசாரியன் பெயர்

மறைகொடியோன், வின்னூலாளன், பாரத்துவாசன்

அறிஞர் பெயர்

சான்றவர், மிக்கோர், நல்லோர், தகுதியோர், மேலோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலகம், மேதாவியர்

ஆசாரியன் பெயர்

ஆசான், தேசிகன், ஓசன், உபாத்தியாயன், பணிக்கன்

மாணாக்கன் பெயர்

கற்போன்

பண்டிதர் பெயர்

கலைஞர், மேதையர், மூத்தோர், கற்றவர், அவை, விற்பன்னர், கவிஞர், சங்கம், சாரதி, சூரி, சாடு, புலவர், அறிஞர், புதர்

கலைஞர் பெயர்

கவிவல்லோர்

ஒத்துரைப்போர் பெயர்

கணக்காயர்

மூத்தோன் பெயர்

குரவன், ஐயன், சுவாமி, கோமான், அடிகள், அத்தன், உரவோன், ஈசன், பதி, இறை

பெருமையிற் சிறந்தோன் பெயர்

குரிசில், அண்ணல், ஏந்தல், தோன்றல், செம்மல்

எப்பொருட்கு மிறையின் பெயர்

நாதன், கொழுநன், காந்தன், பதி, கோன், ஈசன், ஆதிபன், அதிபன், செம்மல், அரன், பிரான், ஆதி, மன்னன்

உயர்ந்தவர் பெயர்

உலகம்

திரண்டோர் பெயர்

சவை, சமவாயம், சங்கம், சமுதாயம், சமூகம், கோட்டி, அவை, குழாம், குழு, கூட்டம், திரள், கணம்

பெண்கள் கூட்டத்தின் பெயர்

பண்ணை, ஓரை, பொய்தல், ஆயம், கெடவரல்

அரசன் பெயர்

புரவலன், பெருமான், ஏந்தல், பூபாலன், வேந்தன், மன்னன், நரபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திலன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன்

வீட்டுமன் பெயர்

தெய்வவிரதன், கங்கைதனயன், சந்தனுமுன்பெற்றோன், பிரமசாரி, காங்கேயன்

குருகுலவேந்தர் பெயர்

பாரதர், பெளரவர், கெளரவர்

தருமன் பெயர்

குவளைத்தாரான், யுதிட்டிரன், பொறையன், முரசக்கொடியோன், அறத்தின்சேய், பாண்டுமைந்தன், குந்திபுதல்வன், மெய்ம்மைவிரதமாக் கொள்வோன்

துரியோதனன் பெயர்

காந்தாரிமைந்தன், நந்தியாவர்த்தத்தாமன், அரவுயர்த்தவன், வணங்காமுடியினன், அரசர்மன்னன், சுயோதனன், திருதராட்டிரன்றன்செல்வன்

கன்னன் பெயர்

கதிர்மதலை, கவசகுண்டலன், கச்சைக்கொடியினன், கானீனன், அங்கர்கோமான்

வீமன் பெயர்

மடங்கற்கொடியோன், மாருதி, வாயுமைந்தன், இடிம்பைகொழுநன், கதாயுதன்

அருச்சுனன் பெயர்

கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், சவ்வியசாசி, வீபற்சு, விசயன், பார்த்தன், கேசவற்குத்தோழன், சுவேதவாகனன், கிரீடி

சேரன் பெயர்

வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போந்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலயமான், பொருநையாற்றோன், சேரலன்

சோழன் பெயர்

நேரியன், சென்னி, பொன்னித்துறைவன், நேரிவெற்பன், ஆரின்மாலையன், கிள்ளி, அபயன், கோழிவேந்தன், வளவன், செம்பியன், புலியுயர்த்தோன், சூரியன், புனனாடன், மால்

பாண்டியன் பெயர்

செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின்றாரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகையந்துறையன், மாறன், பொதியவெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கெளரியன்

குறுநிலமன்னன் பெயர்

குறும்பர், அரட்டர், வேளிர், புரோசர்

அமைச்சர் பெயர்

தேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ்வோர், உழையர், மந்திரர், முதுவர், முன்னோர், அமாத்தியர்

படைத்தலைவன் பெயர்

பொருநன், சேனாபதி

நிமித்திகன் பெயர்

வருங்காரியஞ்சொல்வோன், சாக்கை, வள்ளுவன்

கணக்கர்வழியினுள்ளார் பெயர்

காவிதியர்

பரிவாரத்தின் பெயர்

பரியாளம்

வரைவின்றி யாவர்க்குங்கொடுக்கு முதல்வள்ள லெழுவர் பெயர்

செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்

இரப்போர்க்குக் கொடுக்கு மிடைவள்ளலெழுவர் பெயர்

அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன், சந்தன்

புகழ்வோர்க்குக் கொடுக்குங் கடைவள்ள லெழுவர் பெயர்

பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி

வைசியர் பெயர்

இளங்கோக்கன், மன்னர்பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பரதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள்

சூத்திரர் பெயர்

மண்மகள்புதல்வர், வளமையர், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர், வினைஞர், பின்னவர்

மருத்துவர் பெயர்

வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர்

குயவன் பெயர்

கும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கிரி, மட்பகைவன்

சித்திரகாரர் பெயர்

சிற்பர், ஓவியர், மோகர்

கண்ணாளர் பெயர்

சிற்பியர், துவட்டா, ஒவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்ணுள் வினைஞர்

கொல்லர் பெயர்

கருமர், மனுவர்

தச்சன் பெயர்

மரவினையாளன், மயன், தபதி

தட்டார் பெயர்

பொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள், சொன்னகாரர், அக்கசாலையர்

சிற்பாசாரியர் பெயர்

மண்ணீட்டாளர்

பொருளினையுருக்குந்தட்டார் பெயர்

பொன்செய்யும் புலவர்

பணித்தட்டார் பெயர்

கலந்தருநர்

முத்தங்கோப்பார் பெயர்

மணிகுயிற்றுநர்

கன்னார் பெயர்

கஞ்சகாரர், கன்னுவர்

அநாரியர் பெயர்

மிலைச்சர், மிலேச்சர்

சோனகர் பெயர்

யவனர், உவச்சர்

உப்புவாணிகர் பெயர் /p>

உமணர்

வண்ணார் பெயர்

காழியர், தூசர், ஈரங்கோலியர்

நாவிதன் பெயர்

பெருமஞ்சிகன், சீமங்கலி, ஏனாதி

வேதகாரர் பெயர்

(கூடைமுதலியவை பின்னுவோர்) பொருந்தர்

நெய்வார் பெயர்

காருகர்

துன்னர் பெயர்

(தையற்காரர்) பொல்லர்

தோற்றுன்னர் பெயர்

செம்மார்

கூவநூலோர் பெயர்

(கீழ்நீர்க்குறியறி சாத்திரம்) உல்லியர்

சங்கறுப்போர் பெயர்

வளைபோழ்நர்

ஊன்விற்போர் பெயர்

சூனர்

தோல்வினைமாக்கள் பெயர்

பறம்பர்

சண்டாளர் பெயர்

கொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞர்

பாணர் பெயர்

சென்னியர், பண்டர், ஒவர், வந்தித்துநிற்போர், மதங்கர், சூதர், பண்ணவர்

செக்கான் பெயர்

சக்கிரி, நந்தி

கள்விற்போர் பெயர்

செளண்டிககர், துவசர், பிழியர், படுவர்

மீகாமன் பெயர்

மீகான், மாலுமி, நீகான்

பண்ணுவார் பெயர்

(குதிரைப்பாகர்) மாவலர், வதுவர், வாதுவர்

யானைப்பாகர் பெயர்

பாகர், ஆதாரணர்

மெய்காப்பாளர் பெயர்

காவலர், கஞ்சுகி

உறைகாரர் பெயர்

காரோடர்

தேர்ப்பாகன் பெயர்

சூதன், வலவன், சாரதி

ஒற்றர் பெயர்

வேயர், சாரணர்

மடையர் பெயர்

வாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்

கூத்தர் பெயர்

நாடகர், கண்ணுளாளர், நடர், வயிரியர், நிருத்தர், கோடியர், பொருநர், அவிநயர்

தமிழ்க்கூத்தர் பெயர்

வாயிலோர்

கழாயர் பெயர்

(கழைக்கூத்தர்) வேழம்பர்

நரம்புக் கருவியாளர் பெயர்

குயிலுவர்

தோற்கருவியாளர் பெயர்

இயவர்

வெறியாட்டாளன் பெயர்

தேவராளன்

தேவராட்டியின் பெயர்

சாலினி

அயலவர் பெயர்

நொதுமலாளர், வம்பலர்

புதியவர் பெயர்

விருந்தோர், அதிதி, வம்பலர்

வழிச்செல்வோன் பெயர்

பதிகன்

ஏவுவான் பெயர்

வியவன்

மூதுணர்ந்தோர் பெயர்

முதுவர்

உரியயோர் பெயர்

கிழவர்

குறிக்கொள்வோர் பெயர்

பாராயணர்

தூதர் பெயர்

வித்தகர்

வினையுரைப்போர் பெயர்

வழியுரைப்போர், பண்புரைப்பவர்

அடிமையின் பெயர்

தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்

தோழன் பெயர்

சிலதன், நண்பன், பாங்கன், சேடன், துணைவன், எலுவன்

தோழன் முன்னிலைப் பெயர்

ஏடா

தோழி பெயர்

சிலதி, சகி, பாங்கி, சேடி, இருளை

தோழி முன்னிலைப் பெயர்

ஏடி, எல்லா

குருடன் பெயர்

அந்தகன், சிதடன்,

கூனின் பெயர்

கோணல்

குறளின் பெயர்

சிந்து, வாமனம், குஞ்சம்

செவிட்டின் பெயர்

வதிர்

முடத்தின் பெயர்

பங்கு, குணி

ஊமையின் பெயர்

மூகை, மூங்கை

அலியின் பெயர்

பெண்டகன், பேடி, நபுஞ்சகன், சண்டன்

கொலையாளியின் பெயர்

காதகன், சாருகன்

வேதனை செய்வோன் பெயர்

பீதன், சகிதன், பீரு

வேகியின் பெயர்

சவனன்

வஞ்சகன் பெயர்

நிசாதன்

தூர்த்தர் பெயர்

படிறர், பல்லவர், பரத்தர், இடங்கழியர், விடர், காமுகர்

நாகரிகர் பெயர்

சதுரர், காமுகர்

கிராமமுற்றோன் பெயர்

கிராமியன்

வல்லோன் பெயர்

வலுவை, வல்லுநன்

மாட்டார் பெயர்

வல்லார்

குலமுளோன் பெயர்

குலீனன்

கரியவன் பெயர்

கள்வன்

நோயுற்றொழிந்தோன் பெயர்

உல்லாகன்

காலாளின் பெயர்

பதாதி

ஆயத்தமானோன் பெயர்

சந்நத்தன்

கூர்மையில்லோன் பெயர்

மந்தன்

நிர்வாணியின் பெயர்

நக்கன்

மிகுபுகழாளன் பெயர்

இயவுள்

அருளோன் பெயர்

காருண்ணியன்

கடிகைமாக்கள் பெயர்

(மங்கல பாடகர்) எட்டர், வந்திகள், கவிகள், கற்றோர், வண்டர்

கொடையுளோன் பெயர்

புரவலன், ஈகையாளன், வேளாளன், தியாகி, வேள்வியாளன், உபகாா

வரைவறக்கொடுத்தளிப்போன் பெயர்

வள்ளியோன்

ஏற்போன் பெயர்

இரவலன், பரிசிலாளன், யாசகன், தீனன்

திருடர் பெயர்

கரவடர், சோரர், தேனர், பட்டிகர், புரையோர், கள்வர்

தரித்திரன் பெயர்

அகிஞ்சனன், தீனன், பேதை, நல்கூர்ந்தோன், இல்லோன், வறியன், ஆதுலன், ஏழை, உறுகணாளன், இலம்பாட்டோன், மிடியன்

திண்ணியன் பெயர்

வயவன், திறலோன், வண்டன், மிண்டன், மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன்

தானைத் தலைவர் பெயர்

கூளியர், ஏறாளர், வாளுழவர், மள்ளர், மறவர், படர்

பகைவர் பெயர்

அரிகள், செறுநர், சேரார், அமரார், உள்ளார், நள்ளார், மருவலர், தெவ்வர், மாணார், மாற்றலர், மன்னார், ஒன்னார், தரியலர், ஒட்டார், வட்கார், சார்பிலர், பற்றார், செற்றார், பரர், கேளார், ஒல்லார்

மேவினர் பெயர்

ஒல்லுநர், தொடர்ந்தார், சேர்ந்தார், ஒட்டுநர், பெட்டார், வேட்டார், புல்லுநர், பசைந்தார், மித்திரர், புரிந்தார், ஆர்வலர், விழைந்தார், நல்லவர், காதலித்தார், நள்ளநர், நயந்தார், கூட்டம், ஒன்றுநர்

சுற்றத்தின் பெயர்

உற்றவர், இகுளை, நட்டோர், உறவு, ஒக்கல், கிளை, சார்ந்தோர், பற்றினர், சிறந்தோர், நட்பு, பந்தம், பரிசனம், கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசனம்

கீழோர் பெயர்

பொறியிலார், கயவர், நீசர், புள்ளவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், பல்லவர், கையர், கலர், பூரியர்

அறிவிலான் பெயர்

முழுமகன், சிதடன், பேதை, மூடன், மண்ணை, அஞ்ஞை, இழுதை, மடன், ஆதன், ஏழை

தொழில் செய்வோர் பெயர்

தொழுவர், கம்மியர்

வாயில் காப்போர் பெயர்

வாயிலாளர்

பெண் பெயர்

அரிவை, அங்கனை, மடந்தை, ஆடவள், ஆட்டி, மாயோள், சுரிகுழல், மகடூஉ, காந்தை, சுந்தரி, வனிதை, மாது, தெரிவை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நாரி, பிரியை, காரிகை, அணங்கு, பிணா, பெண்டு, பேதை

புருடன் பெயர்

ஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ, மகன், புமான், குமரன்

ஆணைச் சிறப்பிக்கும் பெயர்

நம்பி

பெண்ணைச் சிறப்பிக்கும் பெயர்

நங்கை

பெண்பாற்குரிய பருவமாவன

பேதை (7), பெதும்பை (11), மங்கை (13), மடந்தை (19), அரிவை (25), தெரிவை (31), பேரிளம்பெண் (40),

கைம்மை பெற்றோன் பெயர்

கோளகன்

வேற்றோற்குப் பெற்ற பிள்ளையின் பெயர்

குண்டகன்

கன்னிபெற்ற பிள்ளையின் பெயர்

கானீனன்

நாற்குலத்துள் உயர்குலத்தாணு மிழிகுலப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்

அநுலோமன்

உயர்குலப்பெண்ணு மிழிகுலத்தாணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்

பிரதிலோமன்

அநுலோமத்தானும் பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்

அந்தராளன்

அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தானுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்

வீராத்தியன்

தலைவியின் பெயர்

குரத்தி, அத்தை, முதல்வி, கோமாட்டி, ஆசாள், இறைவி, ஐயை, சாமி

நோற்பாள் பெயர்

கந்தி, ஒளவை, அம்மை, கன்னி, கெளந்தி

அமங்கலையின் பெயர்

கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை

மலடியின் பெயர்

மைம்மை, வந்தி

கோலஞ்செய்வாள் பெயர்

வண்ணமகள்

வேசையின் பெயர்

பரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, பெறுவகொள்வாள், விலைமகள்,

மூத்தாள் பெயர்

விருத்தை

குமரியின் பெயர்

கன்னி

நாடகக் கணிகையர் பெயர்

நிருத்தமாது, கூத்தி

அசதியின் பெயர்

குட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி, குண்டம், துட்டை

பதினாறாண்டிற் பெண் பெயர்

யுவதி

பாடுவிச்சி பெயர்

மதங்கி, விறலி

தம்பதியின் பெயர்

இரட்டை, ஆண்பெண்

குறிஞ்சிநிலமாக்கள் பெயர்

குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனவர், இறவுளர்

குறிஞ்சி நிலப்பெண் பெயர்

குறத்தி, கொடிச்சி

குறிஞ்சி நிலத்திறைவன் பெயர்

மலையன், வெற்பன், சிலம்பன், கானகநாடன்

பாலைநிலமாக்கள் பெயர்

மறவர், எயினர், புள்ளுவர், இறுக்கர்

பாலைநிலப் பெண் பெயர்

எயிற்றி, வன்கட்பிணா, மறத்தி

பாலைநிலத் தலைவன் பெயர்

மீளி, காளை, விடலை

புளிஞர் பொதுப் பெயர்

குறவர், மாகுலவர், குன்றவர், கிராதர், மறவர், கானவர், வனசரர், சவரர், கொலைஞர், பாவமூர்த்திகள், முருடர், பொறையிலார், எயினர், வேடர்

முல்லைநில மாக்கள் பெயர்

முல்லையர், பொதுவர், அண்டர், கோவிந்தர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், கோபாலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையர் முல்லைநிலப் பெண் பெயர் - தொறுவி, பொதுவி, ஆய்ச்சி, குடத்தி, இடைச்சி முல்லைநிலத் தலைவன் பெயர் - கானநாடன், குறும்பொறை, நாடன், அண்ணல், தோன்றல்

மருதநிலமாக்கள் பெயர்

களமர், தொழுவர், மள்ளர், கம்பளர், உழவர், விளைஞர், கடைஞர்

மருதநிலப் பெண் பெயர்

கடைச்சி, ஆற்றுக்காலாட்டி

மருதநிலத் தலைவன் பெயர்

மகிழ்நன், ஊரன், கிழவன்

நெய்தனிலப் பெண் பெயர்

பரத்தி, நுளைச்சி, அளத்தி, கடற்பிணா

நெய்தனிலத் தலைவன் பெயர்

கொண்கன், துறைவன், மெல்லம்புலம்பன், கடற்சேர்ப்பன்

உப்பமைப்போர் பெயர்

அளவர், உமணர்

பாட்டன் பெயர்

தாதைதன்றாதை, மூதாதை, பிதாமகன்

ஈன்றவன் பெயர்

தாதை, அப்பன், ஐயன், தந்தை, அம்மான், அத்தன், பிதா

ஈன்றவள் பெயர்

அவ்வை, அம்மனை, பயந்தாள், அம்மை, யாய், அன்னை, ஆயி, மோய், தாய்

வளர்த்த தாதியின் பெயர்

செவிலி, கோடாய், கைத்தாய்

முன்பிறந்தாள் பெயர்

தெளவை, சேட்டை

தங்கையின் பெயர்

பின்னை

தங்குடிச்சுற்றத்தின் பெயர்

ஞாதியர், தாயத்தார்

மாமன் பெயர்

மாதுலன், அம்மான்

ஓர் குடியிற்கொண்டோன் பெயர்

சகலன்

மூத்தோன் பெயர்

சேட்டன், தம்முன், முன்னவன், அண்ணன்

பின்னோன் பெயர்

இளவல், பின்னை, அநுசன், கனிட்டன்

காதலன் பெயர்

கணவன், கொழுநன், வேட்டோன், கண்டன், வல்லவன், பத்தா, துணைவன், தலைவன், கொண்கன், தவன், காந்தன், மணமகன், உரியோன், அன்பன், மணவாளன், பதி, கேள்வன், நாயகன்

தேவி பெயர்

இல்லவள், உரிமை, பன்னி, குடும்பினி, இல், இல்லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பாரி, வாழ்க்கைத்துணை, களத்திரம், காந்தை, காதலி, நாயகி

மகன் பெயர்

சந்ததி, மதலை, சூனு, தனயன், காதலன், மெய்யன், நந்தனன், சிறுவன், தோன்றல், குட்டன், செம்மல், மருமான், பிள்ளை, முளை, சுதன், புதல்வன், புத்திரன், மைந்தன், கால், பொருள், சேய், எச்சம், வழி, பிறங்கடை

புதல்வி பெயர்

சிறுவி, புத்திரி, தனயை, ஐயை, பந்தனை, மகள், சுதை

மகன் மகள் என்னுமிருபாற்கும் பொதுப்பெயர்

எச்சம்

பிள்ளைப் பன்மையின் பெயர்

குறுமக்கள், மகார், சிறார்

படையின் பெயர்

தானை, பதாதி, தந்திரம், தளம், தண்டம், வானி, ககனம், யூகம், வாகினி, அனீகம், பாடி, சேனை, கவனம், பலம், பரிகலம், பதாகினி

படைவகுப்பின் பெயர்

அணி, உண்டை, ஒட்டு, யூகம்

படையுறுப்பின் பெயர்

அணி, நெற்றி, கை, தூசி

பின்னணியின் பெயர்

கூழை

கொடிப்படையின் பெயர்

தார்

படையறற் பெயர்

கீழறுதல், அறைபோதல்

மனிதர் பெயர்

மக்கள், நரர், மாக்கள், மானவர், மாந்தர், மண்ணோர், ஆண்டையர், மைந்தர், மனுடர், மானுடர்

மக்கட்பரப்பிற்குப் பெயர்

மன்பதை, பைஞ்ஞீல்

உடம்பின் பெயர்

உடல், உறுப்பு, அங்கம், யாக்கை, உயிர்நிலை, தேகம், காயம், சடலம், மூர்த்தம், மெய், தாவரம், தனு, ஆதாரம், கடம், புதை, புணர்ப்பு, காத்திரம், பூட்சி, ஆகம், பூதிகம், சரீரம், புற்கலம்

வடிவின் பெயர்

வடிவம், உருவம், மேனி, சட்டகம்

பிணத்தின் பெயர்

பிரேதம், சவம், களேவரம், அழனம்

உடற்குறையின் பெயர்

கவந்தம், மட்டை, யூபம்

காலின் பெயர்

சரணம், பதம், தாள், அங்கிரி, பாதம், சலனம், கழல், அடி

கரட்டின் பெயர்

பரடு

கணைக்காலின் பெயர்

சங்கம்

முழந்தாளின் பெயர்

முழந்து, சானு

தொடையின் பெயர்

ஊரு, குறங்கு, வாமம், கவான்

அல்குலின் பெயர்

கடிதடம், நிதம்பம்

இடையின் பெயர்

நட, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்

மருங்கின் பக்கத்தின் பெயர்

ஒக்கலை

வயிற்றின் பெயர்

உதரம், மோடு, அகடு, குக்கி, பண்டி

தேமலின் பெயர்

திதலை, பொறி, துத்தி, சுணங்கு

கொப்பூழின் பெயர்

இதலை, உந்தி, நாபி, இலஞ்சி, போகில்

ஆண்குறியின் பெயர்

கோசம்

பெண்குறியின் பெயர்

பகம்

மார்பின் பெயர்

அகலம், மருமம், நெஞ்சு, ஆகம், உரம்

முலையின் பெயர்

நகிலம், கொம்மை, கொங்கை, குயம், தனம், குருக்கண், பயோதரம், சுவர்க்கம், பறம்பு

முலைக்கண்ணின் பெயர்

சிலீமுகம், சூசுகம்

கைத்தலத்தின் பெயர்

கரம், அத்தம், பாணி, தோள்

முழங்கையின் பெயர்

கூர்ப்பரம்

மணிக்கட்டின் பெயர்

கிலுத்தம்

உள்ளங்கையின் பெயர்

அகங்கை, அங்கை, குடங்கை

விரலின் பெயர்

அங்குலி

நகத்தின் பெயர்

உகிர்

தோளின் பெயர்

புயம், மொய்ம்பு, வாகு

கழுத்தின் பெயர்

கந்தரம், கீரீவம், களம், கண்டம்

முதுகின் பெயர்

புறம், வெரிந், அபரம், வென்

பிடரின் பெயர்

சிறுபுறம், கயில், எருத்தம், சுவல்

தோண்மேலின் பெயர்

நிகலம்

முகத்தின் பெயர்

வதனம், ஆனனம், துண்டம், வத்திரம்

உதட்டின் பெயர்

இதழ், அதரம், பாலிகை, முத்தம்

மேலுதட்டின் பெயர்

ஒட்டம்,

கீழுதட்டின் பெயர்

அதரம்

பல்லின் பெயர்

எயிறு, தந்தம், தசனம்

பல்லுக்கும் நகைக்கும் பொதுப்பெயர்

முறுவல், மூரல்

மோவாயின் பெயர்

தாடி, கட்டம், சிவுகம்

நாக்கின் பெயர்

நா, சிகுவை, தாரை, தாலு

காதின் பெயர்

கன்னம், அள், கேள்வி, செவி

மிடற்றின் பெயர்

அணல்

உண்ணாக்கின் பெயர்

அண்ணம்

மேல்வாய்ப்புறத்தின் பெயர்

அணரி, அணல், அண்ணம்

கதுப்பின் பெயர்

கவுள், கபோலம், கொடிறு, அனு

மூக்கின் பெயர்

ஆக்கிரணம், கோணம், துண்டம், நாசி

கண்ணின் பெயர்

நயனம், நேத்திரம், அக்கம், நாட்டம், கோ, நோக்கம், சக்கு, பார்வை, தாரை, விலோசனம், விழி, அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, அம்பகம்

கண்மணியின் பெயர்

தாரை

கண்ணிமையின் பெயர்

விளிம்பு

புருவத்தின் பெயர்

பிருகுடி, நுதல், பீரு, புரூரம், பூரு, புகுடி

நெற்றியின் பெயர்

நிடலம், நுதல், குளம், இலாடம், மத்தகம், பாலம், முண்டம், அளிகம்

தலையின் பெயர்

மூர்த்தம், உவ்வி, உத்தமாங்கம், சிரம், முடி, சென்னி, முண்டம், சிகரம், மத்தகம்

குடுமியின் பெயர்

முடி, சிமிலி, சிக்கம், சிகை

உச்சியின் பெயர்

சுடிகை, குழி, நவிரம்

ஆண்மயிரின் பெயர்

உளை, நவிர், குடுமி, பித்தை, ஓரி, குழல், கார், குஞ்சி, தளை, சிகை, தொங்கல், பங்கி

ஆண்மயிர்க்கும் பெண் மயிர்க்கும் பொதுப்பெயர்

குழல், கதுப்பு, கேசம், சுரியல்

பெண்மயிரின் பெயர்

குருள், குழல், விலோதம், ஓதி, கூழை, குந்தளம், மராட்டம், குரல், ஐம்பால், அளகம், கூந்தல்

மயிர் முடியின் பெயர்

கொப்பு, முச்சி, பின்னகம், கொண்டை, பந்தம், தம்மில்லம், சிகழிகை

பிற மயிரின் பெயர்

ஓரி, கேசம், பங்கி, உளை, உரோமம், மராட்டம்

செறி மயிரின் பெயர்

உரோமம், சிரோந்தம்

மயிர்க்குழற்சியின் பெயர்

குந்தளம், விலோதம்

சடையின் பெயர்

குடிலம், வேணி, கோடீரம், பின்னல், சடிலம்

அவயத்தின் பெயர்

காத்திரம், உறுப்பு, அங்கம்

சந்தின் பெயர்

மூட்டு, கொளுத்து, கந்து

நரம்பின் பெயர்

சிரை, சங்கனனம், நாடி

கழலையின் பெயர்

அரலை,

கோழையின் பெயர்

ஐ, காசம்

உடற்றழும்பின் பெயர்

அங்கிதம், சேக்கை, வசி, வடு

இறையின் பெயர்

பொறி, வரை

நரையின் பெயர்

சரை, பலிதம்

தலையோட்டின் பெயர்

கபாலம்

எலும்பின் பெயர்

அத்தி, என்பு, களேவரம்

கழியடலின் முழுவெலும்பின் பெயர்

கங்காளம்

இந்திரியத்தின் பெயர்

பொறி, கரணம், கந்தம்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்வற்றை முறையே அறியுங்கருவிகளாவன

நா, கண், மெய், காது, மூக்கு

உயிரின் பெயர்

ஆதன், சேதனன், பசு, சீவன், புற்கலன், கூத்தன், அணு, இயமானன், ஆன்மா

மக்கட்பெயர்த்தொகுதி நிறைவுற்றது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,