விழிப்புதான் விடுதலைக்கு முதல்படி...
12 மே 2011
படுகுழிக்குள் தள்ளப்பட்ட இராஜதந்திரம் கட்டுரை காண..(நன்றி தமிழ் மிரர்)
18 மே 2011

உலகில் எட்டுக்கோடி தமிழர்களாம் !
எத்தனை பேர் வருவீர்கள் இந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த !
எத்தனை பேர் வருவீர்கள் இந்த கொலைகளைக்கண்டிக்க ?
எங்களுடைய எதிர்காலம் என்ன ?
எங்களையும் இப்படிச் சிதைந்து போக விடுவீர்களா ? அல்லது ஒன்று கூடி வருவீர்களா?
கட்டாயம் எல்லோரும் வாங்கோ!

10 மே 2011

கனடா - ஆம்னி டிவி - நாடுகடந்த தமிழீழம் - செயற்பாடுகள்

canada_omnitv by valarytv

1 மே 2011

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் நிகழ்வு

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. இராசு. மாறன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் திரு. கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அக்னி சுப்பிரமணியம் மற்றும் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



1 மே 2011

டென்மார்க் மிதிவண்டிப் பயணம் (நேரடி ஒலிபரப்பு) ஒவ்வொரு நாளும் அவர்களது பயண நிகழ்வு தொடர்ந்து காணவும்......

டென்மார்க்கில் வாழும் மனோகரன் மற்றும் பார்த்தீபன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய தமது மிதிவண்டிப்பயணத்தை இன்று அவர்கள் வாழும் Struer நகரத்தில் இருந்து ஆரம்பித்துள்ளனர். காலை 9 மணிக்கு Struer நகர டென்மார்க் மக்களும் தமிழ்மக்களும் ஒன்றுகூடி மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்துவைத்தனர்.



1 மே 2011

இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது இலங்கை - வீரகேசரி வாரஏடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயலாளர் ரமேஷ் என்றழைக்கப்படும் அன்னலிங்கம் உதயகுமார் இனந்தெரியாதோரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார் கவனிக்கப்பட வேண்டிய உடனடி சிறப்பு நடவடிக்கை ஒன்று ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த பரிந்துரையில் முதலாவதாக குறிப்பிடப்பட்ட “”அரச மற்றும் இணை இராணுவக் குழுக்களின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்கிற வேண்டுகோளிற்கு கிடைத்த முதல் எதிர்வினையாக இதனைப் பார்க்கலாம்.
அதாவது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “தி வோல் ஸ்ரீட் ஜேர்னல்’ என்ற பத்திரிகையும் இவ்வாறான நிலைமைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது. இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றங்களைச் சுமத்துவதால் அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கடும் போக்கினை மேற்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டு விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள் என்று எச்சரிக்கிறது அப்பத்திரிகை. முழுக் கட்டுரை காண சொடுக்கவும்.

30 ஏப்ரல் 2011

நாடுகடந்த தமிழீழ அமைப்பு சார்பாக சென்னையில்....



29 ஏப்ரல் 2011

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள் சொல்லும் இந்தியா
சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள்

சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
சிங்கள அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் மகிந்தவுக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன்சிங் அவர்கள் தொலைபேசியூடாக தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன...... கட்டுரை காண சொடுக்கவும்.

26 ஏப்ரல் 2011 14:13

விசாரணை நடத்து, அல்லது வாக்கெடுப்பு நடத்து! - ஐ.நா. அறிக்கை சொல்லாடல்-1 (ஈழதேசம்.காம்)

நிபுணர் குழுவின் அறிக்கையானது இறுதியாக வெளியிடப்பட்டுவிட்டது. ரஷ்யாவின் அழுத்தங்களையும் மீறி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 25-ம் நாளிலிருந்து ஒரு நாள் தாமதமாக 26-ம் நாளன்று வெளியாகிவிட்டது அறிக்கை. ஐ.நா. தனக்குத் தானே பாவமன்னிப்பு வழங்கிக்கொள்ளும், அல்லது வரலாற்றில் தன்னை நடந்து முடிந்த அழிவுகளுக்குப்பின் நல்லபிள்ளை வேடத்தில் காட்டுவதற்காக அறிக்கையை வெளியிட்டு விட்டது. ஆனால் விடயம் அத்துடன் ஓயாது. இந்த அறிக்கை குப்பைத்தொட்டியில் வீசப்பட்டாலும் ஒயாது என்பதை அறிக்கையின் தனி ஈழம் அல்லது ஈழ மக்களுக்கான தீர்வு தொடர்பான சொல்லாடல்கள் முன்வைக்கின்றன. கட்டுரை காண சொடுக்கவும்.

செவ்வாய்க்கிழமை, 26, ஏப்ரல் 2011

ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை முழுமையாகப் பெற

FULL WAR CRIMES REPORT:( PDF)

UN Secretary-General's statement:


TIME இதழின் சரியான முடிவு - ராஜபக்சேவின் பெயர் நீக்கம்


21 - 04 - 2011 ... People & Power - Sri Lanka: War Crimes

அல்ஜீரா தொலைக்காட்சி இலங்கையில் அரச படைகளின் உதவியோடு சென்று கண்ட காட்சிகளை 25.10 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணத் தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் எப்படிச் சீரழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை இக் காணொளி காட்டும். நடந்து முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னும் விடிவில்லை

20 - 04 - 2011... CHANNEL 4 ...


18 - 04 - 2011...

பிரான்சில் சிறிலங்காவுக் ஆதரவுக்கரம் நீட்டி இடம்பெற்ற பல்கலைக்கழக கருத்தரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் முடக்கப்பட்டது இணையப் பக்கம் பார்க்க சொடுக்கவும்


16 - 04 - 2011... CHANNEL 4 ...


16 - 04 - 2011... Mahinda Rajapaksa, President of Sri Lanka, thereby, found guilty of several counts of crimes
12 - 04 - 2011 சரணடைந்த நடேசன் உயிருடன் தீயிட்டு சித்திரவதை:

2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.
முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. பார்க்க.. அதிர்வு.காம்.

08 - 04 - 2011 கேணல் ரமேஷிடம்

இலங்கை இராணுவத்திடம் 17ம் திகதி சரணடைந்ததாகக் கூறப்படும் கேணல் ரமேஷிடம், தேசிய தலைவரின் மகள் (துவாரகா) எங்கே என்று இராணுவம் கேட்டுள்ளது. அதற்கு அவர் தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, தேசிய தலைவரின் மனைவி எங்கே என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் ரமேஷ் அவர்கள் தெரியாது என்றே பதில் வழங்கியுள்ளார். பின்னர் தளபதி ஜெயம் எங்கே? அவர் எந்த இடத்திற்கு பொறுப்பாக இருந்தார்?, தேசிய தலைவரின் நெருங்கிய நண்பர்கள் யார்? யார்? இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தேசியதலைவருடன் யார் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்ற கேள்விகளும் ரமேஷிடம் முன்வைக்கப்பட்டுள்ளதை வீடியோவில் காணலாம். நன்றி - அதிர்வு.காம்.
நடந்து முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்று ரமேஷ் எங்கே ?. சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள்? மூடி மறைக்கப்படும் அரச கொலைகள் பற்றிய செய்தி என்று வெளிவரும் ?

23 - 03- 2011......நேரம்......13:10

ஐக்கிய நாடுகள் சபை லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர்கள் விடயத்தில் வெளிக்காட்டவில்லை என ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

இறுதிக்கட்ட போரின்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.
40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்காலம் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியிருந்தபோதும் ஐ.நா அதிகாரிகள் அமைதி காத்தனர்.
இன்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புக்குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என கூறுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா தெரிவித்தார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16ஆவது கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பொது நிலவரங்களுக்கான பிரிவில் தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இணைய பக்கம் காணச் சொடுக்கவும்

19 - 03- 2011........
நான்காவது கட்ட ஈழப்போரில் மிக்-27 யுத்த விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன. முன்னாள் விமானப்படைத் தளபதி அதிர்ச்சித் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை விமானப் படை தனது நான்கில் ஒரு பங்கு விமானங்களை இழக்க நேரிட்டது. இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை விமானப் படை யின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இணைய பக்கத்தைக் காணச் சொடுக்கவும்.

16 - 03- 2011


தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தெற்கு சூடானில்

தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தெற்கு சூடானில் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசி ஊடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து நேற்று கோலாலம்பூரில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.
இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய நாடுகளுக்கு சென்று நாடு கடந்த அரசின் செயற்பாடு தொடர்பாக விளக்கி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்த கூட்டம் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு ‘இந்தியாவின் நிலை’ முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார்.
அவ்விடயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான் நாடு, தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.
அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

08 - 03- 2011........ஆயுதங்கள் மௌனித்தன., வாய்கள் பேசுகின்றன.

எனக்கு எதுவுமே தெரியாது., இதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.
எனக்குப் பிரச்சனைகளை ஆக்கவும் தெரியும். அடக்கவும் தெரியும்.
நானே ஒரு அடிமை நான் எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்.
நான் எங்குமே சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
121 + 63 + 30 + 10 + 7 + 2 + 1

05 - 03- 2011 ........வழக்கிலிருந்து விடுபட இதுவும் நடிப்பா இல்லை உண்மையா? ,

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையால் ஏற்பட்ட கசப்புணர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள திமுக, மத்திய கூட்டணி அரசிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை ஒதுக்க திமுக முன் வந்தும், அக்கட்சி 63 இடங்களை கேட்பதாகவும், அதுவும் தாங்கள் கேட்கிற தொகுதிகளையெல்லாம் தர வேண்டும் என்றும் கேட்பதாகவும், இது நியாயம்தானா? என்றும் கருணாநிதி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் மத்திய கூட்டணி அரசிலிருந்தும் விலகுவதாக அறிவித்த திமுக, பிரச்சனையின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியும் முடிவாகி விட்ட நிலையில், காங்கிரஸ் தற்போது போக்கிடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை வைத்து இதுநாள் வரை தண்ணிக்காட்டி வந்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக சரியான ஆப்பு வைத்துவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதே சமயம் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான விளைவுகளையும் திமுக சந்திக்க வேண்டும்.அதனை சந்திக்க திமுக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.