எண் இணைய தளத்தின் பெயர் இணைய தளம் பற்றிய குறிப்பு

01.

நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் எனத் தமிழில் வெளிவந்த அனைத்தையும் அப்படியே பாதுகாக்கிற உயரிய முறையின் வழி - படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைச் செய்துள்ளது. நூலகத்தில் உள்ள அயலக மின்னூல்கள் என்ற தொடுப்பானது உலகம் முழுவதும் நூல்களைப் பாதுகாக்கிற இணைய தளங்கள் பற்றிய செய்தியைச் சொல்லுகிறது. நூலகத்தில் உள்ள இதழ்களையும் நூல்களையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருப்பது வணங்குதற்குரிய செயல். ஈழமண்ணிலிருந்து வெளிவந்த அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இந்த இணையதளம் வாழ்த்துதற்குரியதே.


02.

"மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" என்பது உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழார்வலர்களும் பெற வசதிசெய்யும் திட்டம். 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் 400 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைத் தட்டச்சு செய்து படிவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது. சங்க நூல்களில் பல இந்த வகையில் மின்நூல்களாக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது வணங்குதற்குரிய செயல்.


03.

இந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுத்துள்ள அரிய முயற்சி இது. தமிழில் வெளிவந்த 1617 வகையான நூல்களை (4,11,723 பக்கங்களை) இந்த இணையத்தில் இணைத்துள்ளது. நூல்களை இலவசமாக இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும். வலை இறக்க முடியாது. இணையத்தில் நுழைந்து, நூல்களைக் காணுவதற்குரிய செயலிலை வலையிறக்கி நமது கணினியில் பதிவு செய்து கொண்டு, மொழிப் பட்டியலில் தமிழைத் தேர்வு செய்து சொடுக்கினால், புத்தகத்தின் பட்டியல் தோன்றும். பட்டியலில் விரும்புவதைத் தேர்வு செய்து உள்நுழைந்தால் புத்தகத்தைக் காணலாம். வைத்திய ரத்தினச் சுருக்கம் போன்ற அரிய நூல்களும் உள்ளன.


04.

தமிழ் மரபு அறக்கட்டளை. தமிழ் மொழியின் நுட்பத்தைப் பாதுகாக்கும் நோக்கொடு இயங்கிவரும் அமைப்பு. 2001 டிசம்பரில் கொங்கன் படை என்ற நூலை மின்பதிவு செய்து இதன் பயணம் தொடங்கியது. இதுவரை அபிதான கோசம், கண்ணுக்குள் வெளி, எக்காளக் கண்ணி, கோதை நாச்சியார் தாலாட்டு என 90 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை, மின்நூல்கள் ஆக்கி வலையேற்றியுள்ளது. இந்த மின்நூல்களை இலவசமாக வலையிறக்கலாம். நண்பர்களை இணைத்து இயங்கிட முன்னெடுத்துள்ள இவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.


05.

காந்தளகம். தமிழ் நூல்களின் வெளியீட்டிற்கான தரமான பதிப்பகமாக விளங்கும் இது தமிழ் நூல் என்கிற இணையதளம் வழி, இலவசமாக வலையிறக்கிட, மின் நூல்களையும் வைத்துள்ளது. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், பொங்கு தமிழ், தமிழர் கால்வாய், பறவைகள் எனத் தொடரும் இவைகள் 15 க்கும் மேற்பட்டதாக உள்ளன. இந்த மின்நூல்களை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்கலாம், அச்சிடலாம், இணைய இணைப்பில் மட்டுமே பார்க்க இயலும். புதிய நூல்களை மின்நூலாக்கி வைத்துள்ளது வணங்குதற்குரிய செயலே. வணங்கி வாழ்த்துவோம்.


06.

தமிழக அரசின் பாடத்திட்ட நூல்கள் - படவடிவக் கோப்புகள் பகுதி பகுதியாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் 70 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் படவடிவக் கோப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் பயிற்சிக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன. தற்பொழுது அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை கற்பித்தல் அட்டைகளின் வழியாகத் தானே கற்றல் முறையில் நடைபெறுகிறது.


07.

நூல்களை ஒருங்குறியில்
இணையத்தில் மட்டுமே
படிக்க முடியும்.
150 க்கும் மேற்பட்ட
நூல்கள் உள்ளன.


படைப்பாளிகளே, பார்வையாளர்களே... மேலுள்ள இணைய தளங்கள் தவிர வேறு இணைய தளங்கள் தமிழ் நூல்களையும், இதழ்களையும் படவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்திருந்தால், அவை பற்றிய குறிப்பினை அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன். உலக அளவில் மின்நூலாக்கப்பட்ட அனைத்து வகையான தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகளையும் திரட்டி வரிசைப் படுத்துவோம். செயல்படுபவர்களை ஊக்குவிப்போம், வாழ்த்துவோம், வணங்குவோம். கிடைத்தற்கரிய நம் தமிழ் நூல்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறை யினருக்குக் காட்சிப் படுத்த உதவுவோம்.