அருணனின் இளங்கதிர் இதழ் 24 - தமிழிய உணர்வோடு நடத்துகிற இதழ். தமிழிய நோக்கில் அமைந்த தரமான கட்டுரைகள், கவிதைகள், தமிழ் என்கிற மணிமொழியாரின் தொடர் என வணிக நோக்கமற்று இதழ் வெளிவருகிறது. பாழடையும் கண்ணகி கோயில் என கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் பற்றிய குறிப்பினை வெளியிட்டுள்ளது.கோவை, இராமநாதபுரத்திலிருந்து, அரு.மணிமேகலை வெளியிடுகிற தமிழுணர்வு இதழ். இந்த இதழ் தமிழ் எண்கள், திருவள்ளுவராண்டு குறித்துக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. சமுதாய நலனுக்கான குறிப்புகளையும், பெண்விடுதலை பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது. கவிதைச் சோலை என உரைவீச்சுகளை வெளியிட்டுள்ளது. தமிழன் கால்வாய் எனப் பெயர் சூட்டுமாறும், ஞானபீடக்கூத்துகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,