காரைக்கால் கிளிஞ்சல் மேட்டிலிருந்து பாலகங்காதரன் வெளியிடுகிற பல்சுவைத் திங்களிதழ் இது. 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களத்துச் சிப்பாய்களால் சுடப்படுவதற்கு எதிர்விளையாக - ஆசிரியர் உரையும், அட்டைப்படமும் வெளியிட்டுள்ளது. காரைக்கால் வளர்சிப் பணிகளையும், மக்களது நிலைகளையும் இதழில் சுட்டிக் காட்டுவது. சிறுகதை, கட்டுரை, கவிதை, துணுக்கு எனப் பல்சுவையோடு - மக்களுக்கு ஈர்ப்புடைய செய்திகளை தருவதோடு, விழிப்புணரவுச் செய்திகளையயும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் வெளியிட்டுள்ள கடல் மேல் அவலங்கள் பேரா.முத்து.குணசேகரன் அவர்களது கட்டுரை அருமையாக உள்ளது. கவிஞர் சு. செளரிராஜன் எழுதுகிற தொடர் - காரைக்காலிலிருந்து கனடா வரை சுவையாக உள்ளது. இதழ் தொடர வாழ்த்துகள்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,