மும்பையிலிருந்து அன்பாதவன் - மதியழகன் சுப்பையா தொடங்கியுள்ள தமிழ் சிற்றிதழ். அ எழுத்தை இந்தி எழுத்தில் எழுதி ணி என்பதைத் தமிழில் எழுதி தலைப்பாக்கியுள்ளது. கவிதையும் கவிதை சார்ந்ததுமான செய்திகளை உள்ளடக்கி வெளிவரும் என அறிவித்துத் தொடங்கியுள்ளது. இது முதல் இதழ். இலக்கிய உலகில் முன்பு அறிமுகமான அன்னம்விடுதூது, மண், போன்று இந்த இதழும் நீண்ட தாள் வடிவில் ( சி4 அளவை நீளவாக்கில் இரண்டாக மடித்து) 32 பக்கங்களில் அச்சாக்கி வெளியிட்டுள்ளது. இருமாதமொரு முறை வெளிவரும் இதழாக அறிவித்துள்ளது. தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில் - கவிதை, மொழிபெயர்ப்பு, அய்க்கூ, லிமரைக்கூ, சென்ரியூ, ஹைபுன், உரைநடைக்கவிதை, என கவிதை குறித்த கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பக் கேட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,