இசைத் தமிழ். சென்னையிலிருந்து புரட்சிதாசன் அவர்களால் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்நது வெளிவருகிற இதழ். சங்கஇலக்கிய ஆராய்ச்சி, தமிழர் இசை பற்றிய ஆராய்ச்சி எனத் தரமான கட்டுரைகளைத் தொடர்நது வெளியிடுகிற இதழ். மரபுப்பாக்களை வெளியிடுவதோடு, உரைவீச்சுகளையும் இதழில் வெளியிடுகிறது. இசைக்கருவிகள், நாட்டியம் பற்றிய ஆராய்சிக் கட்டுரைகள் உயர்தரத்ததாக இருக்கும். முகவரி -17. வடக்கு போக் சாலை, தி.நகர்., சென்னை 17

ஒன்பதாவது ஆண்டாக முனைவர் புரட்சிதாசன் அவர்கள் சென்னையிலிருந்து தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தி வருகிற இதழ் இது. நடனம் இசை என்கிற நுண்கலையின் பல்வேறு நுணுக்கங்களைத் இதழில் வெளியிட்டு வருகிறார். இந்த இதழில் இசைக் கருவிகள் பற்றி செய்திகளைத் தெளிவாக விளக்கியுள்ளார். நடனத்தின் பல்வேறு அசைவுகளைப் படங்களின்வழிக் காட்டுவது சிறப்பானது. தொல்காப்பியம், திருக்குறள் போன்ற சங்கநூல்களைப் பற்றிய உயர் செய்திகளையும் இதழ்வழி வெளியிட்டு வருகிறார்....தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,