இளந்தமிழன். தி.வ.மெய்கண்டார் தொடங்கித் தொடாந்து நடத்துகிற இலக்கியத் திங்களிதழ். இது ஐந்தாமாண்டின் ஆறாவது இதழ். இயங்கிய மக்களைப் பற்றிய வரலாறு காட்டி, வாழுகிற மக்களை வழிநடத்துவது என்பது உயரியது. அந்த வகையில் தமிழுக்காகத் தரமாக இயங்கிய மக்களது பதிவு என்பது தற்பொழுது குறைந்தே காணப்படுகிறது. அவரவர்களும் தங்களது படைப்பையே விளம்பரப்படுத்தி, விற்பனையாக்கி, விருதுகளும் பாராட்டுகளும் பெற்று, மகிழ்ந்து, விழலுக்கிறைத்த நீராகிப் போகின்றனர். இவர்களால் உருவாகுபவர்கள் இல்லை. இவர்களும் உருவாகுவது இல்லை. பட்டிமன்றம், மேடைப்பேச்சு, எனப் பொழுதுபோக்கி, வளர்ந்து வருகிற ஊடகங்களுக்கு ஏற்றவாறு தன்னை வளைத்து வாழ்ந்து வரும் மக்களை என்னவென்று சொல்வது? - இவர்களுக்கு இடையில் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது உயரியது. முகவரி : 7. கிழக்கு மாடவீதி, மயிலை, சென்னை 4.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,