ஊமையர் குரல். ஆசிரியர் காளிமைந்தன் அவர்களால் நாமக்கல்லிலிருந்து வெளியிடுகிற இதழ். இந்த இதழ் 40 ஆவது இதழ். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத விழிப்புணர்வென்று சங்கே முழங்கு என்ற கவிதை வரிகளைத் தலைப்பிலிட்டு இதழ் தொடர்ந்துள்ளது. இதழின் கட்டுரைகள் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி வழிநடத்துபவை. இதழ் ஆசிரியர் துணிச்சலாக எந்த வித சமரசமுமின்றி பிரச்சனைக்கான ஆணிவேரைக்காட்டி அறிவுறுத்துகிற இதழ் இது. குணம் குற்றத்தை எடை போட்டு வாக்களிப்போம், தமிழ்ச் சான்றோர் பேரவை அப்பா அருணாசலமுமா விபீசணப்படையில், மிகவும் கெட்ட நாள் அட்டமியா? நவமியா? ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல் கேஸ் விலை இருமடங்காக உயரப் போகிறது இந்திய மக்களே எச்சரிக்கை - என்பன போன்ற கருத்துரைகள் அடங்கிய இதழ் இது. இதழ் முகவரி : 55, கூட்டுறவு காலனி, நாமக்கல் (94432 51403)ஊமையர் குரல் : ஆசிரியர் காளிமைந்தன் வெளியிடுகிற இருமாத இதழ். இது ஒரு நுகர்வோர் மற்றும் சமூக நல மதவாத மற்றும் ஊழல் எதிர்ப்பு அரசியல் மாதஇதழ். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத விழிப்புணர்வென்று சங்கே முழங்கு! சங்கம் சேர்வோம்! லஞ்சம் எதிர்ப்போம்! யாதும் ஊரே! யாவரும் கேளீர்! மனிதகுலம் வாழ்க! மதவெறி வீழ்க! எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் எத்தன்மைத்தாயினும் - மெய்ப்பொருள் காண்பதறிவு! - எனத் தலைப்பிலிட்டு தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற தரமான இதழ்.நுகர்வோர், சமூகநல, மதவாத ஊழல் எதிர்ப்பு, அரசியல் மாத இதழ்.

ஆசிரியர் : காளிமைந்தன். இந்த இதழ் எண்: 36. பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கிளர்ந்தெழுந்தும், தவறுசெய்கிற அமைப்பை, தனிமனிதனைச் சுட்டிக்காட்டி வழிநடத்தியும், பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தும் - இருமாத இதழாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழில் விளம்பரம் இல்லை. இதழ் ஆசிரியரே தன் செந்தக் கணினியில் அச்சாக்கித் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகப் பிரச்சனைகளை மட்டுமல்லாது உலக அளவிலான பிரசசனைகளையும் முன்னெடுத்து அதற்கான சரியான தீர்வையும் இதழில் குறிப்பிடுகிற தரமான இதழ். முகவரி : காளிமைந்தன், 55 கூட்டுறவு காலனி, நாமக்கல் - 637 001தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,