ஊற்று நீர். ஆசிரியர் மாணவர் படைப்பிதழ். குழந்தைக்கு எது உரியதோ, சரியானதோ, உதவுவதோ அதையே கற்றிடக் கை கொடுப்போம் எனத் தலைப்பிலிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இதழைத் தொடர்ந்து வருகிற திங்களிதழ். துணுக்குகள், பொது அறிவுக் குறிப்புகள், கல்வி நுட்பங்கள், செயல் முறைகள், விளையாட்டுகள் என மகிழ்வோடு கற்றலுக்கான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகிய இதழ் இது. தெளிந்த சிந்தனையுடன், மாணவர்களை ஆற்றலோடு வளர்த்தெடுப்பதற்குரிய செயற்பாடுகளுடன் தொடருகிற இதழ் இது. முகவரி : 5/8 பழைய அஞ்சல் அலுவலகச் சாலை, திருச்சி 1தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,