சென்னை 94 பகுதியிலிருந்து கடந்த 28 வருடங்களாகத் தொடர்ந்து தொய்வின்றித் தமிழ் தமிழர் நலம் பேணும் இதழாக, வணிக நோக்கமின்றி, கருத்துவிதைப்பையே முதன்மைப் படுத்தி அருகோ அவர்களது செயற்பாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த இதழ். இந்தியாவுக்குக் கவலை இல்லை - தமிழக அரசுக்கும் அப்படியா என்ற வினாவை முன்வைத்து ஒடுக்கப்படுகிற தமிழினத்தை அடையாளம் காட்டி கட்டுரை எழுதியுள்ளது. முனைவர் மலையமானின் கண்ணீர் விடுவதற்காகவே மண்மீது பிறந்த இனம் என்ற கட்டுரை மலேசியத் தமிழர்களது நிலையை விளக்குகிறது. அண்ணாவின் அறிஞர் தகைமையும் அயலகத் தமிழரின் கேள்விக் கணையும் என்று நடுப்பட்டி க.அப்பாத்துரை ஆங்கிலவழியில் தமிழகம் பயணிப்பதைச் சுட்டிக்காட்டி வருந்துகிறார். ஆசிரியர் தனது உரையில் - சிறிய மாநிலங்களாகச் சீரமைக்கும் திட்டம் மொழிவழித் தேசியத்தை முறிக்கும் சதி - என விளக்கியுள்ளார். முன்தோன்றி மூத்த குடி என்ற குணாவின் நூல் விமர்சனமும் இதழில் உள்ளது. என்ன சொல்லப் போகின்றீர் என்ற கட்டுரை தமிழ் இழந்த தமிழ்நாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.உலகத் தமிழினத்தின் ஒற்றுமைக்குரல் உங்கள் உணர்வின் ஏடு என்று தலைப்பில் வெளியிட்டு, தமிழ் தமிழர் நலம் பேணும் இதழாகத் தொடர்ந்து வணிக நோக்கமின்றி தொய்வின்றி செறிவாக வெளிவரும் இதழ். உரைவீச்சுகள், மரபுப்பாக்கள் என அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுதப்பட்டவையாக உள்ளன. கடல்கடந்து வாழும் தமிழர்களின் தமிழ்த்துடிப்பைப் பாக்களின் வழி அறிய முடிகிறது. அருகோவின் விடைகள், நேயர் நெஞ்சம் என இதழ்ப் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்வது தமிழியமாக இருக்கிறது. ஆசிரியர் உரை இதழ்க்குறிப்பு எனச் சுருங்கிப் போகாது, தமிழனின் வரலாறு காட்டி, தமிழனின் இழப்பைக் காட்டி உணர்வேற்றுகிறது. தமிழிலும் வாதடலாம் - என எழுத்தில் இருக்காது நடைமுறையில் செயற்படுத்தவேண்டும் என்று சந்திரேசன் கட்டுரை சுட்டுகிறது.தமிழ் மொழியின் வளமையையும் அது தமிழ் நாட்டில் இருக்க வேண்டும் என்றும், தமிழர்கள் தமிழ்நாட்டில் உயரத் தமிழரது ஆட்சி அமைய வேண்டும் என்றும் - விளக்கங்களை, வழிமுறைகளை, செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி எழுதியும், பேசியும், இயங்கியும் வருகிற அருகோ அவர்களால் தொடர்ந்து, தொய்வின்றி, வணிக நோக்கின்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிற தரமான சிற்றிதழ்.தமிழ், தமிழர் என இயங்கி வருகிற தரமான இதழ். அரு.கோபாலன் அவர்களது முயற்சியில் சென்னை சூளைமேட்டிலிருந்து வெளிவருவது. ஒக்கனேக்கல் சுற்றுலாத் தளத்தை தனது எனக் கர்நாடக அரசின் ஆதரவொரு கொடிநாட்டி எழுந்த செயலைக் குறிப்பிட்டுத் தமிழ்நாட்டிற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. மூடிக்கிடக்கும் வள்ளுவர் சிலையை மக்கள் உணர வேண்டும் எனவும், கொடுங்சிறையில் வாடும் குணா, நெடுஞ்செழியன் பற்றி மக்கள் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப் பகுத்தறிவோடு, முற்போக்குக் கருத்துகளை விதைத்து வருகிற தரமான மாத இதழ். கட்டுரைகள் நுட்பமானதாகவும் கருத்துச் செறிவுடையதாகவும் இருக்கும். அருகோவின் விடைகள் வழிகாட்டுபவைகள். முகவரி : எழுகதிர் (அரு.கோபாலன்) 4-77 சுபேதார் தோட்டம், சூளை, சென்னை 94.உலகத் தமிழினத்தின் ஒற்றுமைக்குரல் - பாவரங்கு என உரைவீச்சுகளையும், மரபுப்பாக்களையும் வெளியிடுகிறது. அருகோவின் விடைகள் தமிழியம் காட்டுவதாக இருக்கும். நடப்பிலை ஆசிரியர் உரையாக்கி விளக்கும் தன்மை உடையது. தமிழ்வழிக் கல்வியே தமிழர்க்கு அரண் என்றும் ம.பொ.சி பெயரைத் தமிழகத் தலைநகருக்குச் சூட்டவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,