கலை : ஆறாவது ஆண்டில் தொடருகிற 34 வது இதழ் இது. முற்போக்குச் சிந்தனைகளை உள்வாங்கிய கலை மணிமுடி அவர்களின் வெளிப்பாடு இது. இதழின் உள் அட்டையில் தோழர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. நேர்காணல், கட்டுரை, கவிதை, நூல் அறிமுகம், நூல் விமர்சனம் எனத் தொடர்ந்துள்ளது. ஏ.ஜி.கே அவர்களின் நேர்காணல் ஊக்கமூட்டுவதே. விவாத அரங்கு என சாதியம் பற்றி விவாதித்துள்ளது. நவீன நாடகத்தைப் பற்றிய குறிப்பு வெளியிட்டுள்ளது. என்றோ பறந்து, தன்னலத்தால் சிறகு வெட்டப்பட்ட வானம்பாடி பற்றி மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த வலையேற்றத்திலுள்ள சிற்றிதழ்ச் செய்தியில் டொமினிக் ஜீவா அவர்களது நிகழ்வு பற்றிய செவ்வியன் கட்டுரையை படிக்கவும்.



கலை : சென்னையிலிருந்து கலை இலக்கிய நண்பர்கள் முனைப்புடன் அனைத்து வகைப் படைப்புகளையும் தரமாக விழிப்புணர்வு வகையில் எழுதவைத்து அச்சாக்கி, சுற்றுக்கு விடுவதோடு பாராட்டிப் பரிசளித்து ஊக்குவிக்கிற இதழ் இது. தொடர்புக்கு : கலை (மணிமுடி) 26.பாரதி குறுக்குத்தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர், சென்னை58.



ஒருங்கிணைப்பு : கலை மணிமுடி. 5 ஆண்டுகளாக வெளிவருகிற, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கருத்துகளை உள்வாங்கிய இதழ். இருமாத இதழ். தரமாக வெளிவருகிற இதழ்களை ஊக்குவிக்கப் பரிசளித்தும் வருகிற இதழ், முகவரி : 26.பாரதி குறுக்குத் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர், சென்னை 58. email: ambaiappa@yahoo.co.in



ஐந்தாம் ஆண்டாக வெளிவரும் கலை இலக்கிய வட்டத்தின் தொடர்பு இதழ். ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளர்களுக்காகப் போட்டி வைத்துப் பரிசளித்து வருகிறது. பாரதிதாசன், பாரதி, ஜீவா என முற்போக்குக் கருத்துகளோடு இயங்கியவர்களது அடிச்சுவட்டில் தொடருகிற இதழ். பல ஆண்டுகளாகத்தான் இதனைச் சொல்லிவருகிறோம். முதலாளியத்தைச் சுட்டுகிறோம். விளைவு.?. ஒருவட்டத்திற்குள் கிளர்ந்து எழுவது எதைச் சாதிக்கப்போகிறது.?. மக்கள் எழுச்சியால் மலர்ந்தது தான் மக்களாட்சி என்கிறோம். இன்றைய மக்களாட்சி.!!?!!


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,