இதழ் எண் 19. ஆசிரியர் கி.ராஜநாராயணன், கந்தாய இதழ் - அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வரும் என்று எழுதியுள்ளது.(ஆசிரியர் கி.ராஜநாராயணன் தொடங்கிய பொழுது திங்களிதழாகத் தொடங்கியது) தற்பொழுது கழனியூரான் பொறுப்பில் வருகிறது என்று எண்ணுகிறேன். இதழ் முகவரி கழுநீர்க்குளம், 627 861, திருநெல்வேலி. தாத்தாவின் மடியில் பேரன்அமர்ந்து கதை கேட்பது போன்ற படம் இதழின் தலைப்பில் உள்ளது. இதழ் நாட்டுப்புற இலக்கியங்களைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் எனத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இதழ் வெற்றியடைந்துள்ளது. இதழிலுள்ள கி.ரா.வின் பக்கங்கள் சுவையாக இருக்கும். வல்லிக் கண்ணன் எழுதியுள்ள குசுவிடுகிற ராணி கதை முதல் நிறைய கதைகள் உள்ளன. அனைத்தும் நாட்டுப்புற கதைகள். நாட்டுப்புறப் பாடல்களும் உள்ளன.கி.ரா. புதுச்சேரியிலிருந்து நடத்திவருகிற எண்வழிச் சிற்றிதழ் எண் 14.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,