கவிதை உறவு. ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவிதைக்காக வெளியிட்டு வருகிற திங்களிதழ். இந்த இதழின் அட்டையில் இசைத்தமிழ் இதழைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் புரட்சிதாசன் அவர்களது படத்தினை வெளியிட்டுள்ளது. இதழின் இறுதிப்பக்கம் ஏர்வாடியார் பக்கம். இந்த இதழில் வாய்ப்புகளே வரங்கள் என்ற அனுபவக்குறிப்பு காணப்படுகிறது. இதழில் மரபுப் பாக்களும் உரைவீச்சுகளும் இடம் பெற்றுள்ளன. கடற்கரைக் கவியரங்கம் நடத்தி மக்களை ஈடுபடவைத்து. கவியரங்கத்தில் படிக்கப் படுகிற கவிதைகளை இதழில் வெளியிட்டு - இப்படி கவிஞர்களை வளர்த்தெடுக்கும் பயிற்சிக் களமாக இதழ் காணப்படுகிறது. நடக்கிற நிகழ்வுகளை படங்களுடன் வெளியிடுகிறது. கவிதை மட்டுமல்லாமல் சிறுகதை. குறிப்புத் துணுக்குகள். கட்டுரை ஆகியவையும் இதழில் இடம் பெறுகின்றன. அட்ைட்யிலும் உள்ளேயும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.கவிதை உறவு : ஏர்வாடி இராதா கிருட்டிணன் அவர்களது கவிதைக்கான தொடர்பிதழ், திங்களிதழ். பலரையும் இணைத்துக் கவிதைகளை எழுதவைப்பது. என்பக்கம் என இதழின் இறுதிப்பக்கத்தில் உள்ள எண்ணவோட்டங்கள் தரமானவை.கவிதை உறவு: கவிதைக்காக ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 17 ஆண்களாக வெளிவருகிற இதழ். அட்டையில் இருப்பவர் காந்தளக அதிபர். இதழின் தொடர்பாகக் கவிதை அரங்குகளை நிகழ்த்துவதோடு தொடர்ந்து இதழை வெளியிடுகிற இதழ் இதுதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,