திருச்சியிலிருந்து திருவை குமரன் வெளியிட்டுள்ள 24 ஆவது இதழ் இது. அச்சு இதழாக வெளிவந்துள்ளது. 2003 இல் 23 ஆவது இதழோடு நின்று போன கவிக்காவிரி தற்பொழுது மீண்டும் வெளிவந்துள்ளது. இதழில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்வேறு வகைகளும் அடங்கியுள்ளன. சுற்றுச் சூழல் போராளியாக வாழ்ந்த அசுரன் அவர்களது படமும் குறிப்பும் இதழில் உள்ளது. சேவல் கூவாவிட்டாலும் பொழுது விடியும் என்ற துணுக்குக் கதை - அறிவூட்டுவதே. எப்போது விடியும் சிறுகதை. அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள் என மக்களுக்கான படைப்புகளை இதழில் காண முடிகிறது. இதழில் உள்ள உரைவீச்சுகள் உணர்வேற்றுபவைகளே. அறிவியல் வகுப்பு - ஆய்வகத்தில் மாணவர்கள் - கிழிபடக் காத்திருக்கும் தவளை - உண்மையிலேயே அதிர்வூட்டுவது தான். இதழ் தொடர வாழ்த்துகள்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,