கரூர் மக்கள் களம். கரூரிலிருந்து மாதமிருமுறை இதழாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கக்கூடிய இதழ். இது முதலாமாண்டின் 12 ஆவது இதழ். ஆசிரியர் ந.சரவணன். சிந்தனைச் செம்மல் சிங்காரவேலனார் பற்றிய குறிப்பு இதழிலுள்ளது. பிற இதழ்களில் வெளியான தரமான, மனிதநேய, தமிழிய, ஒடுக்குதலுக்கெதிரான, உணர்வூட்டும் படைப்புகளைத் தொடர்ந்து இதழில் வெளியிட்டு வருகிறது. தமிழ்க் குடமுழுக்குப் போராட்டம் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரசாவது இதற்கு விடிவு காணுமா என்று பொருத்திருந்து பார்ப்போம். பசிதீராத புஸ் என அமெரிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கும் ஐந்து பேய்கள் என - மதவாதம், ஆபாசத் திரைப்படங்கள், சாதியம், நடிகர் மன்றங்கள், அரசியல்வாதி - என விளக்கக்குறிப்பெழுதி - இவர்களிடமிருந்து எப்போது விடுதலை என வினாக்கேட்கும் போது தமிழக இளைஞர்களின் மீது இந்த இதழ் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. இதழில் சிறு துணுக்குகளாக பல்வேறு பயனுள்ள செய்திகளை வெளியிட்டுள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,