கிழக்குவாசல். திருத்துறைப்பூண்டியிலிருந்து பல்சுவை இதழாக வெளிவருவது. இது 4 ஆவது இதழ். இலக்கியச் சிந்தனையை நெஞ்சிலே நிறுத்தி, சுவையாக பல்வேறு செய்திகளை ஈர்ப்புடன் தருகிற இதழ். பொன்னீலன் எழுதியுள்ள கம்பனைக் கொண்டாடிய ஜீவானந்தம், புகைப்படக் கவிதை, தமிழ் இலக்கிய மனிதர்களின் நேர்காணல் (இந்த இதழில் இளங்குமரனார்), சிறுகதை, செய்திகள், கட்டுரை, துணுக்குச் செய்திகள் எனத் தரமாக அச்சாக்கியுள்ள இதழ். கோமல் நடத்திய சுபமங்களா இதழ், இலக்கிய நுட்பத்துடன் தொடர்ந்து வந்து, சிற்றிதழ்களுக்கும் பேரிதழ்களுக்கும் இடையில் உள்ள ஒரு இணைப்பு இதழாக விளங்கியது. சுபமங்களா இதழின் தாக்கம் இது போல பல இதழ்கள் உருவாகக் காரணமாக இருந்தது. இந்த வரிசையில் உத்தமசோழன் அவர்களின் உழைப்பில் உருவானது தான் இந்த இதழ். டெல்லியிலிருந்து வெளிவருவது வடக்கு வாசல். திருத்துறைப்பூண்டியிலிருந்து வெளிவருகிறது கிழக்கு வாசல்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,