சென்னையிலிருந்து வெளிவருகிற வானொலி தொடர்பான இதழ் வான்9, ஒலி4. இந்த இதழ் இணையதளத்திலும் வலைப்பூவாக வெளிவருகிறது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்படுகிற வானொலி நிலையங்கள் பற்றிய செய்தியைத் தாங்கி வெளிவருகிறது இந்த இதழ். தமிழ்ச் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதற்கான நேரங்களையும் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு வானொலி ஒலிபரப்புகள் பற்றிய செய்திக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. வானொலி தொடர்பாக நிகழுகிற விழாக்களை அறிமுகப்படுத்துகிறது. வானொலி வாசகர் சந்திப்பையும் குறிப்பிட்டுள்ளது. வானொலி நடத்துகிற போட்டிகள் பற்றிய குறிப்பும் இதழில் காணப்படுகிறது. உலக அளவில் ஒலிபரப்பாகுகிற நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கான தரமான வானொலி பற்றிய குறிப்பையும் இதழின் பின்பக்க உள் அட்டையில் குறிப்பிட்டுள்ளது. வானொலி நிகழ்ச்சியாளர்களுடனான நேர்காணலையும் வெளியிட்டுள்ளது. பெரிய அளவில் 16 பக்கங்களில் திங்கள் ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் தொடர வாழ்த்துகிறேன். 58 அன்னை சத்யாநகர் அரும்பாக்கம்வானொலிச் செய்திகளை முதன்மைப் படுத்துகிற சர்வதேசவானொலி. ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், செலாம்பாளையத்தைச் சேர்ந்த தங்க. ஜெய்சக்திவேல் இந்த இதழின் ஆசிரியர். படிக்கும்போதே இதழ் நடத்தியவர். வானொலி கேட்பவராக இருந்து, படிப்படியாக வளர்ந்து இன்று சர்வதேச அளவில் வானொலி பற்றிய அரிய செய்திகளைத் தமது இதழில் வெளியிட்டு வருகிறார். சீன வானொலியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வானொலி கேட்பதற்கான பல்வேறு கருவிகளை இதழில் அறிமுகப்படுத்தி வருகிறார். ஹாம் ரேடியோ பற்றியும், போட்காஸ்டிங் பற்றியும் இந்த இதழில் வெளியிட்டுள்ளார். முகவரி : 3. முதல் தளம், ப.மாளவியா அவின்யூ, நாதன்ஸ் ஆர்கேடு, எல்.பி.சாலை, சென்னை 41சர்வதேச வானொலி: படப்படி இதழாக, தங்க. ஜெய்சக்திவேல் சென்னையிலிருந்து வெளியிடுகிற இதழ். உலக அளவில் ஒலிபரப்புகிற, பல்வேறு வானொலி தொடர்பான செய்திகளையும், நேர்காணல், துணுக்குகளையும் வெளியிடுகிற இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,