சோலைக்குயில் : கல்லை கவிமுரசு தென்கீரனூரிலிருந்து வெளியிடுகிற மரபுப் பாக்களுக்கான திங்களிதழ். இந்த இதழ் மறைந்த கவிஞர் சுரதாவிற்கான கவிதாஞ்சலிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

மரபுப் பாக்களை இயற்றுவதோடு, மனிதநேயத்துடன் பா எழுதுபவரை ஊக்குவித்து, வளர்த்தெடுத்து, வாழ்த்தி, வழிகாட்டி, உதவுகிற நல்ல நெஞ்சுடைய சுரதா அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாததாகும். தன்னலத்தோடு இயங்காது, பா எழுதுபவரையெல்லாம் பற்றோடு அணைத்து, உறவாக மதித்து வழிகாட்டுகிற உயர்ந்த உள்ளம் உடையவர் சுரதா.

இந்த மாபெரும் கவிஞருக்கு, கவிஞரெலாம் பாடித் தொகுத்து நூலாக்கி அஞ்சலி செய்துள்ளதைக் கண்டு தமிழம் வலை மகிழ்வடைகிறது. சுரதா என்றும் நம் நினைவில் நிற்பார்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,