சென்னையிலிருந்து வெளியிடுகிற தமிழியக்கம் இதழ். புலவர் கி.த.பச்சையப்பன் ஆசிரியராக இருந்து வெளியிடுகிற தமிழுணர்வுத் திங்களிதழ். இதழிலுள்ள பாவாணர் பக்கத்திலிருந்து தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிய முடிகிறது. எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் என்கிற ஆசிரியர் உரை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. மூன்றாவது மொழிப்போர் மாநாட்டின் சூளுரைகளை இதழில் வரிசைப்படுத்தியுள்ளது. ஒற்றுமையும் திட்டமிட்ட செயற்பாடுகளும் தேவை என்கிற தங்கப்பாவின் கட்டுரை ஏற்புடையதேமுனைவர் இரா.இளவரசு, புலவர். கி.த.பச்சையப்பன் மற்றும் ஆசிரியர் குழுவினரால் மிகச் சிறப்பாகத் தமிழியத்திற்காக தெளிதமிழில் புதியதோர் உலகம் செய்வோம் எனப் புறப்பட்டுள்ள தரமான திங்களிதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,