சென்னையிலிருநது தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்பான செறிவான செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவருகிற - தோழர் மணியரசன் - அவர்களின் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கருத்து விளக்க ஏடாக வெளிவருகிறது. இதழின் ஒவ்வொரு கட்டுரைகளும் செறிவாகத் தமிழ்தேசம் நோக்கியதாக இருக்கும். சிதம்பரத்தில் தேவாரம் பாடக்கூடாது என்ற கருத்திற்கெதிராகக் கிளர்ந்து எழுந்த ஆறுமுகசாமியின் படத்துடன் படைப்பாக்கத்தை வெளியிட்டுள்ளது. கரையான் புற்றுக்குள் கருநாகம் - தில்லைக் கோயிலுக்குள் தீட்சதர்கள் என்ற செயராமனின் கட்டுரை வீரியம் மிக்கதாக இருக்கிறது. ப.சிதம்பரத்தின் பொய்முகம் பற்றி கி,வெங்கட்ராமன் எழுதியுள்ளார். ஆசிரியர் மணியரசனின் செறிவான கருத்துருக்கள் - திபெத் மக்க்ளின் விடுதலைக்கான நியாயத்தைக எடுத்துக் காட்டுகிறது. இந்திய அரசியலில் யார் வந்தாலும் - நிரந்தர அரசியல் என்பது - தமிழர் எதிர்ப்பு - நிலையாகவே இருப்பதை இதழின் தலையங்கம் தெளிவாகக் காட்டுகிறது. ஈழத்தமிழரும். தமிழக மீனவர்களும் இலங்கைப் படையால் தாக்கப்படுவதைக் கண்டும் காணாது இருப்பது எத்தகைய கொடுமையானது என்பதனை தலையங்கம் விளக்குகிறது. அய்யா காசி ஆனந்தனின் பின்பக்கக் கவிதை ஈழத்துக் கொடுமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும், ஒக்கேனக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காகவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி "எழுந்த எழுச்சியை" இதழ் காட்டுகிறது.தன்னுரிமைப் போருக்கு முன்னுரிமை கொடுப்போம், தமிழ்த் தேசக் குடியரசில் புதுயுகம் படைப்போம் - என்ற தலைப்புக் குறிப்புடன் இதழ் தொடர்ந்து திங்களிதழாக வெளிவருகிறது. இந்த இதழில் தேசியத் தலைவரின் மாவீரர் உரையை முழுமையாக வெளியிட்டுள்ளது. இந்த இதழில் வெளியாகியுள்ள அணு ஒப்பந்தம் பற்றிய கட்டுரை சிறப்பாக உள்ளது. நம் இளம் தமிழர்கள் அணுவியல் பற்றி ஆய்ந்து உலகை வென்றெடுக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது. மருத்துவ மாணவர்களின் எழுச்சி பற்றிய தொகுப்பினை இதழில் வெளியிட்டுள்ளது. பட்டியூர்ப் பாவலரின் தான்தோன்றிக் கோயபல்சுகள் கட்டுரை சுவையாக உள்ளது,தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தொடர்பு இதழாக ஆசிரியர் பெ.மணியரசன் அவர்களால் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் தமிழ், தமிழர், தமிழ்நாடு நலம் சார்ந்த கருத்துகள் அடங்கிய தரமான திங்களிதழ். உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் ஒரே முகம் என்று அரசியல் கட்சிகளின் ஓட்டுக்காக இயங்கும் தன்மையினைத் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. சிங்கள அரசின் கோர முகத்தை கட்டுரைவழி எடுத்துக் காட்டுகிறது, அரசமைப்புச் சட்டத்தைக் கவிழ்க்கும் நீதித்துறை சர்வாதிகாரம் என கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை தரமானதே. எஸ்.வி.இராசதுரையின் கற்பித தேசமும் விஸ்தீரணப் புரட்சியும் என பெ.மணியரசன் உற்று நோக்கியுள்ளார். இரும்புத் திரை மியான்மரில் எழுச்சிக் கொள்ளும் சனநாயகம் என கி.வெங்கட்ராமன் கட்டுரை எழுதியுள்ளார். தமிழ் தமிழருக்க எதிராக நடக்கிற கொடுமைகளின் போதெல்லாம் கிளர்ந்து எழுந்து எழுச்சி காட்டுவதும் அதை இதழில் பதிவு செய்வதும் வரலாற்று பதிவாக இருக்கிறது,ஆசிரியர் உரையில் பெரியார் சிலை உடைப்பு பற்றி எழுதியுள்ளது. மண்ணைப் பறிகொடுத்துவிட்டு தண்ணீருக்குத் தவிப்பதேன் என்ற முல்லைப் பெரியார் பற்றிய கட்டுரை அருமையானதே. தேவிகுளம் பீர்மேடு இணைந்தால் பிரச்சனை தீரும். இதழிலுள்ள வள்ளலார் சபையை மீட்க வேண்டும் கட்டுரை மிகவும் சிறப்பானது. சுவைத்த பக்கங்கள் பகுதியில் இணைத்துள்ளேன். தொடக்கக் கல்வி பற்றிய கட்டுரையும், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் பற்றிய கட்டுரையும் - நம் நிலையை எழுத்தில் காட்டுவதே. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்ற மருதாசல அடிகளாரின் கருத்து உயர்தரத்ததே. மேலும் இதழில் சிறப்பான உரைவீச்சுகளும், நிகழ்வுக் குறிப்புகளும் உள்ளன. இதழின் பின் அட்டையில் காசி ஆனந்தன் அவர்களது நெருப்புக் குன்றம் கவிதை வரலாற்றுப் பதிவாகிறது.சென்னையிலிருந்து திருமிகு பெ.மணியரசன் ஆசிரியராக இருந்து வெளியிடுகிற திங்களிதழ். கருத்துச் செறிவோடு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உயர் கருத்து விதைப்பு இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. கெடல் எங்கே தமிழர் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க என்கிற கருத்திற்கு சான்றாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஆசிரியரின் தொடர்பிதழ் இது. இந்த இதழில் சிதம்பரத்தில் தமிழில் பாடத் தடைவிதிக்கிற தீட்சதர்களின் முகத்திரையைக் காட்டுகிறது செ.இராசுவின் கட்டுரை. துணை நகரங்களும் பொருளியல் மண்டலங்களும் என்கிற கி.வெங்கட்ராமனின் கட்டுரை துணைநகரம் பற்றிய விழிப்புணர்வினை ஊட்டுகிறது. வில்லனே கதாநாயகன், வில்லியே கதாநாயகி - எப்படித் தமிழினம் ஏமாற்றப்படுகிறது என விவரிக்கிறது. இயக்குநர் வெ.சேகர் வரிச்சலுகை என்பது ரஜினி, கமல் படங்களுக்கே போய்ச் சேரும் என்பதனைத் துல்லியமான விளக்குகிறார். குழந்தைகளின் களவாடப்பட்ட எதிர்காலம் ஆசிரியர்கள் படித்துணர வேண்டும். பின் அட்டையிலுள்ள காசி ஆனந்தனின் தடைவிதித்தவர்களுக்கு உரைவீச்சு விளக்கமாக இருக்கிறது - போர் எங்கள் விருப்பம் அல்ல - தேவை. எனக் காட்டுகிறது.இந்த இதழில் தீட்சதர்களைத் தீண்டாமைக் குற்றத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று மணியரசன் கட்டுரை எழுதியுள்ளார். புரட்சியும் அல்ல வளர்ச்சியும் அல்ல என்று சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். அரிய சான்றுகளும் குறைப்பார்வைகளும் என்ற கட்டுரை பயனாகுவதே. சிதம்பரம் கோயிலை அரசே ஏற்கவேண்டும் என்கிற கோரிக்கை நுட்பமாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் அடிப்படை அயோத்திதாசர் என முன் வைக்கும் நேர்காணல் சிந்திக்கத் தூண்டுவதே. தமிழ் தமிழர் நலம் கருதி வெளியிடப்படும் இந்த இதழ் உரைவீச்சுகளால் வீரிய விதைகளை விதைக்கிறது.இந்த இதழில் ஈழத்தில் வான்வழித் தாக்குதலின் குண்டுக்கு அழியும் தமிழர்கள் பற்றிய கட்டுரையை தியாகு எழுதியுள்ளார். நேபாளத்தில் நடைபெறுகிற ஜனநாயகப் புரட்சி பற்றிய கட்டுரையை கி.வெங்கட்ராமன் எழுதியுள்ளார்.இந்த இதழில் ஓட்டுச் சீட்டு ஒரு போதை ஊசி என்ற தலையங்கம் அருமையாக உள்ளது. நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களின் கொள்ளையை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது சாவித்திரி கண்ணனின் கட்டுரை. தியாகு மறுமலர்ச்சி திமுக வின் நிலையைத் தன் கட்டுரையில் சிறப்பாக அலசியுள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு எனத் தடுக்கப்படும் தண்ணீரைப்பற்றி செயராமன் விளக்கி, தடம் மாறும் அரசியல்வாதிகளைச் சுட்டிக்காட்டுகிறார். திராவிடம் தமிழ்த் தேசியம் பற்றிய மணியரசனின் தொடர் கருத்து விளக்குவதே. கருநாடகச் சிறையிலிருந்து பிணையில் வந்த பேரா.க.நெடுஞ்செழியன் அவர்களது நேர்காணல் உண்மையைக் காட்டுவதே. இந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரை சரியானதே. உண்மையை மக்கள் உணரும் நாள் என்று வரும்?இந்த இதழில் நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டத்தை பற்றி கி.வெங்கட்ராமன் கட்டுரை எழுதியுள்ளார். தியாகுவின் ஹமாஸ் வெற்றி பணியாது பாரத்தீனம் என்ற கட்டுரையும் உள்ளது. விடுதலை அமைப்புகளுடன் இணக்கமாகப் பேசுகிற போக்கை வளர்த்து வருகிற மத்திய அரசுபற்றிய கட்டுரையும் உண்டு. மேலும் இன்றைய தேர்தல் சூழலில் கட்சிகளின் செலவை அரசே ஏற்கலாமா? என்றும் எழுதியுள்ளது. கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டத்திற்கு மாற்று என நெய்வேலி பாலுவின் கட்டுரையும் உண்டு. இதழ் ஆசிரியரின் கார்முகில் கற்பிக்கும் மார்க்சிய மந்திரவாதம் தெடர் 7 ம், நேபாள மாவோவியக் கட்சியின் நிலைபாடு பற்றிய செய்தியையும் எழுதியுள்ளார். வழக்கமாக நிகரன் விடைகள் சிறப்பாகவே உள்ளன. தமிழேந்தியின் கவிதை வெற்றி உறுதி எனக்காட்டுகிறது.தமிழர் கண்ணோட்டம் (2006 பொங்கல் மலர்) - சென்னையிலிருந்து பெ.மணியரசன் ஆசியரியராக இருந்து வெளியிடுகிற இதழ் தமிழர் கண்ணோட்டம். தமிழ், தமிழர் உணர்வோடு, தமிழ்நாட்டில் தமிழருக்கே முன்னுரிமை என்கிற முழக்கத்தோடு தொடருகிற இதழ் இது. தமிழ்த் தேசியமும் அறிவாளிகளும், ஈழம்.உலக அங்கீகாரம் நோக்கி, வகுப்புவாரி உரிமை மறுப்பது அநீதி, தமிழர் திருநாள், தமிழருக்குத் தமிழில் தொடர் ஆண்டு இல்லை ஏன்?, புரட்சி இயக்கமும் இலக்கியமும், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சிக் கொள்கை வளர்ச்சி, பல்லவர் கால உள்ளாட்சி அமைப்புகள், அண்ணல் அம்பேத்கரின் வருண-சாதி ஆய்வு, பழந்தமிழ் இசையில் சுரமும் சுருதியும், இனவெறி எதிர்ப்புப் போராளி (முமியா அபுஜமால்), கருவறையின் அதிர்வுகள், திருக்குறளிள் சித்த மருத்துவம், மக்கள் நல்வாழ்வு அரசு, தொல்காப்பியமும் சமுதாயப் படிநிலைகளும், கூத்தும் இசையும் உடல் உழைப்பும், தமிழ்ச் சினிமாவில் பிறமொழியினர், சிறைகள் திருந்த மானுடம் திரும்பும், பழந்தமிழில் வடவர் செல்வாக்கு, கருநாடகத்தில் கன்னடர் தமிழர் உறவு, மருத்துவத் தமிழ் வளர்ச்சியும் வரலாறும், கங்கை கடாரங் கொண்டான் காதலி, தெற்கெல்லையில் ஒரு தமிழ்ப் போராளி, பூம்புகார் சொல்லும் தமிழர் நாகரிகத் தொன்மை, செம்மொழித் தமிழும் கூட்டணிக் கட்சிகளும், இராவண காவியமும் ஆரிய எதிர்ப்பும், தமிழ்ச் சிற்றிதழ்களின் இன்றைய பணி, தமிழ்த் தேசியம் சுடர்ந்து ஒளிர, மருந்துகள் உலகம் மாறும் காட்சிகள், செத்துக் கொண்டு வரும் செந்தமிழ் இனம், எத்தர்-பித்தர்-போலிக் கொள்கையர், நாடகமேடை ஆட்டங்கள், கிருமிப் போர், மன்சார் ஆப்பிரிக்கக் கவிதைகள், மூடநம்பிக்கை வளர்க்கும் சண்டைக் கோழிகள், உள்ளாட்சிகளில் லஞ்சம், ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள், குடை உரிமை (சிறுகதை), காசி ஆனந்தன் நறுக்குகள் - என்கிற 40 கட்டுரைகளும், 14 கவிதைப் பக்கங்களும் என 222 பக்கங்களில் மிகத் தரமாக வெளிவந்துள்ள பொங்கல் மலர் இது.2005 நவம்பர் இதழில் ஒகேனக்கலை இழப்பதா, நம் இசை முறை, தமிழ் தேசிய அமைப்புகள் ஓரமைப்பு ஆக, இந்து தேசியம், கல்விக் கொள்ளைக்குக் கதவு திறக்கும் சட்டம், தலைநகரில் நடந்த தமிழர் எழுச்சி மாநாடு, காவிரி இடைக்காலத் தீர்ப்பு உயிரோடு இருக்கிறதா?, கார்முகில் கற்பிக்கும் மார்க்சீய மந்திரவாதம், தகவல் அறியும் உரிமையா-தகவல் மறைக்கும் அதிகாரமா?, ஒசூர் தமிழகப் பெருவிழா, தமிழர்களும் அண்டை இனத்தாரும் போன்ற கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.சென்னையிலிருந்து மணியரசன் வெளியிடுகிற இதழ். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழர், தமிழ்நாடு என்பதற்காக எழுதியும், இயங்கியும் வருகிற உயரிய இதழ். மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் என மக்கள் விழிப்புணர்வு வழிகளை உருவாக்கி வருவது. தமிழகம் முழுவதும் கிளைகளை ஏற்படுத்தி, நட்புறவோடு இயங்கி வருகிற இதழ்மூன்றாவது மொழிப்போர் என தமிழகத்தில் நடந்த ஊர்திப்பயணமும், விழா நிகழ்வும் குறிப்பிட்டுள்ளது. இதழில் காசிஆனந்தன் அய்யா அவர்கள் சிற்றிதழ்களை ஆதரிக்கும் திகசி, வ.க. பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.தமிழர் கண்ணோட்டம் : 2005 சனவரி இதழ் பொங்கல் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. விலை ரூ 50. 222 பக்கங்களில் தமிழியச் சிந்தனைகளுடைய தரமான படைப்பாக்கங்களுடன் வெளிவந்துள்ளது. தற்பொழுது தமிழுக்காக இயங்கி வருகிற அனைவரது படைப்பாக்கங்களையும் ஒருங்கிணைத்துள்ளது வணங்குதற்குரியது. பாதுகாக்கப்படவேண்டிய இதழ்இந்த இதழில் கல்விக் கொள்கைக்கு நீதிமன்றம் துணை, வன்கொடுமைத் தாக்குதலில் வதையும் தலித் மக்கள் என்கிற கட்டுரைகள் உள்ளன. கார்முகில் கற்பிக்கும் மார்க்சிய மந்திரவாதம் தொடர் அருமையாக உள்ளது. தமிழுக்காக இயங்கிய ம.பொ.சி நூற்றாண்டில் அவரது தமிழியச் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளது. கணினியில் பயனாகுகிற யுனிகோட் பற்றிய குறிப்புகளை பூங்குழலி சிறப்பாக விளக்கியுள்ளார். கொக்கு பற பற என இன்றைய நிலையை நகையாடியுள்ளது அனைவரும் அறியப்படவேண்டியதே. இதழ் முகவரி : 2 ஆம் தளம், 20/7 முத்துரங்கம் சாலை, தி.நகர், சென்னை 17


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,