இல.செ.க - வின் தன்னம்பிக்கை என்ற இந்த இதழ் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழைத் தொடங்கிய ஆசிரியர் இதழைத் தொடரவேண்டும் என்று என்னோடு பேசியவை, குறிப்பிட்டவை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது மறைவிற்குப் பிறகும் இதழ் தொடர்ந்து வருவது, அவரது இலக்கு நோக்கி வருவது வாழ்த்துதற்குரியது. நிறுவனர் இல.செ.க. பற்றிய குறிப்புகள் இந்த இதழில் உள்ளன. அவை அவரது இளமைக்கால வாழ்க்கையை, இடர்பாடுகளுக்கிடையில் மேலெழுந்த தன்மையை உண்மையாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலெழ விரும்புகிறவர்களுக்கு இந்தப் பாடம், இந்தப் பயிற்சி வழிகாட்டும். நிகழ்வுகள் சரியான நேரத்தில் நடைபெற வேண்டும் கால தாமதம் கூடாது என்பதில் அவர்காட்டிய அக்கறை, துடிப்பு, வேகம் ஆகியவை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது மேலெழுதல் பற்றிய இந்த இதழில் உள்ள கட்டுரை அருமையானது. இதழ் தொடர வாழ்த்துகிறேன்.இல.செ.க - வின் இதழ். தொடர்ந்து வருவது. மக்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய இதழாளரின் மறைவிற்குப் பிறகும் அவரது தொடர்பாளர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதழ். தன் முன்னேற்றக் கருத்துகளை இதழில் கட்டுரையாகவும், சிறுகதை, துணுக்குகளாகவும் வெளியிட்டு ஊக்கமூட்டி வருகிறது. இந்த இதழில் பூ.சா.கோ. கலை அறிவியல் கலலூரியின் செயலர் முனைவர் பா. சம்பத்குமார் அவர்களை இதழில் வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது. இதழின் இவர் எழுதியுள்ள குறிப்பு மற்றவர்களையும் ஊக்கமூட்டிச் செயற்பட வைப்பதே. இதழ் நடத்துவதோடு தன் முன்னேற்றப் பயிலரங்குகளை ஒவ்வொரு ஊரிலும் நடத்திவருவதும் அதன் தொடர்பிதழாக இந்த இதழ் இருப்பதும் பாராட்டுதலுக்குரியதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,