தன்மானக்குரல் : இதழ் எண் 23, டிசம்பர் 2006. கோவையிலிருந்து இதழாசிரியர் வீர.பெருமாள் இதழை வெளியிட்டு வருகிறார். இந்த இதழின் அட்டையில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திருமிகு த.பி.கலாநிதி அவர்களின் புகைப்படமானது இடம்பெற்றுள்ளது. கோவை அரசு மருத்துவ மனையில் தன்னுடைய பணியினை ஏற்றுக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்காக உதவுவதே தன்னுடைய இலக்காகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். மூட்டு மாற்று அறுவைகள், செயற்கை உறுப்பு பொருத்தும் தொழில் நுட்பம் என உயர்கட்டண மருத்துவ முறைகளைக்கூட, அரசுமருத்துவ மனையில் தொடங்கி வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறார். இவரை பல அமைப்புகள் பாராட்டியுள்ளன. இந்த இதழ்வழி இவர் பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. இவரது பணி தொடர தமிழம் வலை வாழ்த்துகிறது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,