தமிழ் லெமூரியா. மராட்டிய மாநிலத்திலிருந்து வெளிவரும் தமிழ் மாதஇதழ். இது முதல் இதழ். இதழ் விலை ரூ10. தமிழ் இலெமுரியா - உங்கள் திசை எங்கள் பாதை. என்று குறிப்பிட்டுள்ளது. இதழ் முகவரி 102 B wing. Dannes Building., Veer Savarkar Nagar, Thane (W), Maharashtra - 400 606 அன்புருவான தமிழ் உறவுகளே என்று தலையங்கத்தில் அழைத்து - தமிழ் பரப்ப இதழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. காப்பாற்றுவோம் கட்டுமானத்தை என்கிற கட்டுரை தமிழர்களின் பண்பாடு காட்டுகிறது. பெரியார் பற்றி மும்பை சமீரா எழுதியுள்ளவை வாழ்த்துதற்குரியவை. திரைப்படங்கள் பெண்களை ஆபாசப்படுத்துகின்றன - என்ற கட்டுரை தேவையானதே. இப்பொழுது திரைப்பட மோகம் குறைந்து தொலைக்காட்சிக்குள் தமிழன் மூழ்கிப் போகிறான். மூடனாகிப் போகிறான். டீசல் இயந்திரத்தை கண்டறிந்தவர் வாழ்க்கைக் குறிப்பு அருமை. இனிவரும் தலைமுறையினருக்கு என்று கோவை காளிதாசனும், நமக்கொரு விதியென்றால் என்று கருவூர் பழனிச்சாமியும் எழுதியுள்ளனர். அறிவுமதியின் இடையினம் சிந்திக்கத் தூண்டுவதே. இதழ் தொடர வாழ்த்துகள்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,