திசை எட்டும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ். இது இதழின் 14 ஆவது இதழ். இது சீனச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. சிறப்பாசிரியர் இரா.நடராசன். ஆசிரியராக இருந்து வெளியிடுபவர் குறிஞ்சி வேலன். இதழின் விலை ரூ30. 144 பக்கங்களில் இதழைத் தரமாக வெளியிட்டுள்ளது. பக்க எண் தமிழ் எண்களாகக் குறிப்பிட்டுள்ளது. நல்லி குப்புசாமி அவர்களது உறுதுணையில் இதழ் வெளிவருவது கண்டு மகிழ்கிறோம். தொடரட்டும். திரு நஞ்சுண்டன், சதாசிவம், விசயகுமார் குனிச்சேரி, புவியரசு, குறிஞ்சி வேலவன் ஆகியோருக்கு நல்லி திசையெட்டும் மொழிபெயர்ப்பு இலக்கிய விருது 2006 கிடைத்துள்ளது அறிந்து வாழ்த்துகிறோம். இந்த இதழில் வாள்பிடித்த கை, இறந்த பின், என்கிற சீனக்கதைகளும், செருப்பு, இருக்கையும் உரிமையும் என்கிற சீனக்குட்டிக் கதைகளும் சீன நாடோடி இலக்கியமான மரமும் மனிதனும், கறுப்பு முகமூடியில் ஒரு ராஜகுமாரன் வெளியாகியுள்ளது.மேலும் தெலுங்குக் கதை, திபெத் கவிதை, தமிழ்க் கதை ஆகியவைகளும் வெளியாகியுள்ளன. கட்டுரைகள், நூல்அறிமுகம், விருதுகள் மற்றும் கடிதங்கள் என்பனவும் இதழில் உள்ளன.



இது 12 ஆவது இதழ். மொழிபெயர்ப்பை முதன்மைப்படுத்தி வேற்றுமொழியிலுள்ள தரமான படைப்புகளை வெளியிடுவதோடு, புதிய படைப்பாக்கங்களையும் வெளியிட்டு வருகிறது. 144 பக்கங்களில் தரமான தாளில் செறிவான படைப்பாக்கங்களை இணைத்துக் கொண்டு வெளிவருவது வாழ்த்துதற்குரியதே. இந்த இதழில் அகதி, அப்பாவிற்கு ஒரு கல்லறை, ஒப்புதல் வாக்குமூலம், மரு என்கிற நான்கு கதைகளும் இடம்பெற்றுள்ளன. வெளியிட்டுள்ள கவிதைகளில் பச்சோந்தி பிரெஞ்சுக் கவிதை சிறப்பானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுவைத்த பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள், நூல் நயம் என மொழிபெயர்ப்பு இலக்கியத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது இந்த இதழ் - தனியிதழ் ரூ30



சீனம், வங்கம், மலையாளம், இந்தி, மணிப்புரி, கன்னட மொழிகளின் மொழிபெயர்புக் கதைகளையும், ராஜ்ஜா, இந்தி, தெலுங்கு, கன்னடம், பிரஞ்சு மொழியின் மொழிபெயர்புக் கவிதைகளையும், கட்டுரைகள், நூல்நயம், கடிதங்கள் என்பனவற்றையும் கொண்டதாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. கோச்சடை எழுதியுள்ள கருத்தரங்க நிகழ்வு பற்றிய கட்டுரை கருத்தரங்கைக் கண்டது போன்ற உணர்வை ஊட்டுகிற வகையில் அமைந்துள்ளது. 144 பக்கங்களில் இதழ் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்துப் பரவலாக்க வேண்டும் என்பது உயர் சிந்தனையே. அவை தரமில்லாத் தனிமனித படைப்பாக்களின் பரவலாக இருக்கும் பொழுதுதான் தன்நலத்தால் தமிழ் கீழிறக்கப்படுவது தொடங்குகிறது, கீழிறக்கப் படுகிறது. தமிழின் வளத்தை, நுட்பத்தை, ஆற்றலை, பன்முகத்தை, பண்பாட்டைக் காட்டுகிற படைப்பாக்கங்களை, நம் முன்னோர்கள் வடித்தெடுத்த இலக்கியங்களை - மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்.



2005 அக்-டிச இதழில் நான்காம் தண்ணீர்(கன்னடம்), முகம் (தமிழ்), மெழுகுவர்த்தி (ஒரியா), தலைமுறை இடைவெளிகள் (இந்தி), யுத்தம் (இத்தாலி) கதைகள் இடம் பெற்றுள்ளன. பால்கே விருது பெற்ற அடூர் அவர்களது நேர்காணல் திரைப்படம் தொடர்பான பல்வேறு நுட்பங்களைக் காட்டுகிறது. நூல நயம் என நூல்களை விமர்சித்துள்ளது. நல்லி துணியகம் வழியாக படைப்பாளர்களுக்குப் பரிசுகளையும் இந்த இதழ் வழங்கியுள்ளது.



ஒவ்வொரு இதழும் குறைந்தது 150 பக்கங்களில், அனைத்து மொழிகளின் மொழிபெயர்ப்புப் படைப்புகளுடன், தரமான தாளில், அச்சு நேர்த்தியுடன் வெளிவருகிற இதழ். நேர்காணல், சிறுகதை, கவிதைகள் என வெளியிடுவது. ஆசிரியர் குழு, மொழிவழி ஆசிரியர் குழு, புரவலர் குழு என மிகப்பெரிய வட்டத்துடன் இதழை உருவாக்குகிறது. நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், சாகித்திய அகாதமி எனப் பாதுகாப்புடன் வருவது



இது இதழ் எண் 5. பிற மொழியிலுள்ள தரமான கதை, கவிதைகளைத் தேர்வுசெய்து அதன் மொழிபெயர்ப்பைத் தரமாக வெளியிட்டு வருகிற இதழ். இதழ் அறிவித்திருந்த நல்லி திசை எட்டும் இலக்கிய விருதை வங்காள - தமிழ் மொழிபெயர்ப்பாளரான திரு.சு.கிருஷ்ணமூர்த்தி பெறுகிறார்



குறிஞ்சி வேலவன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்துகிற தரமான மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ். 3 ஆவது இதழ் இது, விலை ரூ30


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,