உலகத் தமிழர்களின் செய்தி ஏடாக, சென்னையிலிருந்து திருமிகு.பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்படுகிற மாதமிருமுறை வெளிவருகிற செய்தி ஏடு இது. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உயிர்த்துடிப்பில் இயங்குகிற இதழ் இது. வரலாறுகாட்டுகிற இதழ். தமிழீழச் செய்திகளைச் சரியாகத் தருகிற இதழ். உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழினத்திற்கு விடிவு காணவேண்டும் என்கிற துடிப்போடு இயங்குகிற தரமான இதழ். உலகத் தமிழ்ச் சங்கங்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அவற்றின் வழி தமிழர்களுக்கான நலம் பேணவேண்டும் என்கிற உயரிய உந்துதலோடு செயற்படுகிற இதழ். உலகத்தமிழருக்கான பண். கொடி. உடை என விளக்குவதோடு, தமிழர்களுடைய மறைந்த வரலாற்றை மீட்டெடுத்து நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடுகிற இதழ். ஆண்டு நன்கொடை ரூ120. முகவரி - 17/1 நரசிம்மபுரம். மயிலை, சென்னை 4தென்செய்தி : சென்னையிலிருந்து பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்படுகிற திங்களிருமுறைச் செய்திமடல். தொடர்ந்து தொய்வின்றித் தரமான கருத்துச் செறிவேற்றுகிற இதழ். இதழின் இணையதள முகவரி : www.thenseide.com


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,