மதுரையிலிருந்து தமிழாலயன் அவர்களால் வணிக நோக்கின்றி தமிழ் தமிழர் நலம் வேண்டித் தொடருகிற திங்களிதழ். இந்த இதழ் ஏழாவது ஆண்டின் பத்தாவது இதழ். செம்பியனின் மரபுப் பாக்கள், கல்பனா, வீரமுத்து, மதிவாணன், மு.உலகநாயகி - போன்ற கல்லூரிப் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகளை இதழில் வெளியிட்டுள்ளது, குமரிக் கண்ட அரசியல் என குமரி மைந்தன் எழுதுகிற தொடர் தமிழர் வரலாறு காட்டுகிற தரமான கருத்துகளின் தொகுப்பே ஆகும்,தமிழிய மேம்பாட்டுத் திங்களிதழ். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெளிவருவது. வரலாற்றுப் பார்வையில் சங்க இலக்கியம் என்ற தொடர் நுட்பம் காட்டுகிறது. உலகப் பார்வையில் தமிழ்மறை குறளின் சிறப்பைக் காட்டுகிறது. ஒழுக்கம் விழுப்பம் தரும் தொடர் பறம்பை அறிவனின் தமிழியப் பார்வையைக் காட்டுகிறது. சாத்தூர் சேகரன் தொடர்ந்து எழுதிவரும் தொடரான தமிழ் மொழியும் தவறான ஆய்வுகளும் வேர்ச்சொல் பற்றியும் சொல்லாய்வு வழிகாட்டுதல்களையும் காட்டுகிறது. இதழில் செய்திகள் என நடப்பியல் பதிவுகள் உள்ளன. வணிக நோக்கின்றி தமிழியத்தை முன்னிருத்தித் தொடர்ந்து வருகிற தரமான இதழ். ஆசிரியர் தமிழாலயன். முகவரி :தமிழாலயம், 11-1.12 பெரியார் நகர், மதுரை 18தேமதுரத் தமிழோசை : தமிழிய மேம்பாட்டுத் திங்களிதழ். தெளிதமிழில் தமிழியச் சிந்தனைகளை பாக்களிலும், கட்டுரைகளிலும் தொடர்ந்து தருகிற இதழ். இதழில் வெளியான தமிழர் திருநாள் வாழ்த்து - நீரோங்க ஓங்கும் ஏரே, ஏரோங்க ஓங்கும் சீரே, சீரோங்க ஓங்கும் ஊரே, ஊரோங்க ஓங்கும் பாரே.இலக்கியம் : ஆசிரியர்: தமிழாலயன் மதுரையிலிருந்து தமிழுக்காக வெளிவந்து கொண்டிருந்த தேமதுரத் தமிழோசை இதழ் பதிவுபெற்று இலக்கியம் என வெளிவந்துள்ளது. தமிழுணர்வுக் கட்டுரைகள், பாக்களை வெளியிடுகிற தரமான இதழ். முகவரி: இலக்கியம் (தமிழாலயன்) 11-1-12 பெரியார் நகர், மதுரை 18.மதுரையிலிருந்து ப.சுப்பையா அவர்களால் தமிழின் நுட்பத்தையும், வளத்தையும் காட்டுகிற வகையில் உயர்தனிச் சிறப்போடு தொடருகிற திங்களிதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,