அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு எத்தனையோ இதழ்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல இதழ்கள் தொடரப் படுவதில்லை. காரணம் அறிவுமதி தொடங்குவதில்லை. அறிவுமதிக்காகத் தொடங்கப்படுகிறது. தனக்குக் கிடைக்கும் அத்தனை பொருள்களையும் (வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மட்டுமல்ல, உள்நாட்டிலும் கூட) அருகிருக்கும் அனைத்து மக்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, சங்ககாலக் பாவலராக, நெஞ்சு நிமிர்த்திவருவது அறிவுமதிக்கே உரிய உயரிய செயற்பாடு. செல்லும் இடங்களிலெல்லாம் இளைஞர்களை, நண்பர்களை, ஊக்குவித்து, அன்புகாட்டி, அறிமுகப்படுத்தி, உயர்த்தி பெருமைப்படுத்தும் இவரது நெஞ்சு தமிழ் நெஞ்சு. தலைவணங்க வேண்டும். இது முதல் இதழ். அழகிய படங்களுடன். வழவழப்பான தாளுடன், தரமான உரைவீச்சுகளுடன் வெளிவந்துள்ளது. இதழுக்கான அறிமுகம் துபாய், சென்னை, கோவை எனப் பல இடங்களிலும் நடைபெறுகிறது. இதழைவிட இதழ்வழி இதயங்களை இணைக்கிற முயற்சி,தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,