புலவர் துரை தில்லான் அவர்கள் வெளியீட்டாளராக இருந்து திண்டுக்கல்லிலிருந்து வெளிவருகிற இதழ். தமிழகத் தமிழாசிரியர் கழகத் தொடர்பிதழ். தமிழாசிரியர் கழகத்தில் இயக்கச் செய்திகளை மட்டுமல்லாமல் தமிழ் உணர்வுச் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் இலக்கணத்தடம் என்கிற தலைப்பில் தமிழிசை - உயர் தனிச் செவ்விசை என்ற கட்டுரையை தில்லான் எழுதியுள்ளார். இது தொடர் கட்டுரை. மேலும் கற்பக அமிழ்தம் என்கிற சித்த மருத்துவ மாத இதழ் வெளியிட்டுள்ள நோய் நாடல் துறை எண் வகைத்தேர்வு - மூக்கு - ஓர் ஆய்வு என மரு.செ.சிறீராம் எழுதியுள்ள கட்டுரை வெளிவந்துள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,