நற்றிணை : இருப்பதெல்லாம் தமிழனுக்கே இன்பத்தமிழ் ஒன்றே, இனியதையும் இழந்துவிட்டால் இங்கே வாழ்வில்லை என்கிற பாவணரின் வரிகளைத் தலைப்பிலிட்டு இதழ் தொடர்ந்துள்ளது. இது 11 ஆவது இதழ். நிர்வாக ஆசிரியர் விழியரசு. 595 சிவசக்திநகர், வந்தவாசி சாலை, ஆரணியிலிருந்து இதழ் வெளியிடப்படுகிறது. சங்கஇலக்கியப் பாடல்களிலிருந்து தமிழ் வளத்தை, தமிழரது வரலாற்றை காட்டுவது சிறப்பாக உள்ளது. நல்ல தமிழ்ச் சொற்கள் அறிமுகம் பயனாகுவதே. பதினென்கீழ்க் கணக்கு நூல்களில் மக்கட்பேறு என்ற கட்டுரையும் ஆய்வு நோக்கில் உள்ளதே. உரைவீச்சுகள், புதுப்பா வகைகள், சிறுகதை எனப் படிப்பவர்களின் சுவையறிந்து இணைத்துள்ளது போற்றுதற்குரியதே. படிப்படியாக வளர்ந்து சாதனைகாணத் துடிப்பது இதழில் தெரிகிறது. தொடர வாழ்த்துகள்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,