சென்னையிலிருந்து டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்கி இயக்கத்தின் தொடர்பு இதழாக கடந்த 19 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிற இதழ் இது. கடந்த சில திங்கள்களாக இந்த இதழ் மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்களை ஒருங்கிணைத்து, தரமான படைப்பாளிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கான செய்திகளை நுணுக்கமாகத் தருகிற இதழாக இது இருக்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் நுட்பம் இந்த மூன்றும் ஒருநாட்டின் அடித்தளமாக இருப்பவை. இந்த மூன்றிலும்தான் நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம். திட்டமிட்டால் எப்படி முன்னேற முடியும் என்பதோடு, சரியாக இயங்குகிற இயக்கங்களையும், நண்பர்களையும் அடையாளம் காட்டி, இந்த இதழ் வளர்த்தெடுக்கிறது. இந்த இதழில் படிப்பும் இனிக்கும் என்ற கருத்தை முன்வைத்த பாலாஜி சம்பத் அவர்களை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது. வெற்றிக் கதை என வெற்றிக்கான பாதையை சுட்டிக் காட்டுகிறது. கிராமமும் விவசாமும் என முதன்மைப் படுத்துகிறது. இந்த இதழில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய நுட்பக் கருத்துகளை வெளியிட்டுள்ளது. கணினித் தொழில் நுட்ப வல்லுநர் செந்தில் ஆறுமுகம் அவர்களது கட்டுரையும், இதழ்வழி மக்களை மாற்ற முடியும் என்கிற விளக்கமும் உயர் தரத்ததாக உள்ளது. ஒருபக்கம் வெளிநாட்டு மோகத்துடனான உயர்வு, மறுபக்கம் மிக அதள பாதாளம் - எப்படிச் சரிசெய்வது - என எண்ணியிருக்கும் வேளையில் இவரது சுட்டுதல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,