சென்னையிலிருந்து அருப்புக் கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்களால் நடத்தப்படுகிற சட்ட நுணுக்க, சட்ட விளக்க, சட்டப் பயிற்சி, சட்ட ஊக்குவிப்பு இதழ். இதழாசிரியரின் ஊக்குவிப்பில் கல்லூரியல் சென்று சட்டம் பயிலாமலேயே, தானாகவே கற்று, வாதாடி, வக்கீல்களையும் நீதிபதிகளையும் கதிகலங்க வைக்கிற பொது மக்கள் தற்பொழுது உருவாகி வருகின்றனர். ஆர்வலர்கள் விரும்புகிற இடங்களுக்கெல்லாம் சென்று அங்கு அவர்களை ஊக்குவித்துப் சட்டம் தொடர்பாகப் பயிற்சி தருகிற மாபெரும் பணியை இந்த இதழாளர் செய்து வருகிறார். "சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் தன் கண்ணைக் கட்டிக் கொண்டது" - என்றெல்லாம் கவிதைபாடி திசை திருப்பும் படைப்பாளிகளுக்கு இடையில் இவர் ஒரு வெற்றியாளராக நின்று சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள ஊக்கமளிப்பது வணங்குதற்குரியது. புதுமலர் புத்தகாலயம் என்ற பதிப்பகத்தின் வழி தான் கண்ட உண்மைகளை, சட்ட நுணுக்கங்களை எளிமையான நூல்களாக்கி பரவல் செய்வது போற்றுதற்குரியதே. இவரது முகவரி : அருப்புக் கோட்டை செந்தமிழ்க்கிழார், 5 105 பெரியார் பாதை மேற்கு, சூளைமேடு, சென்னை - 600 094.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,