புதிய காற்று. மதுரையிலிருந்து, வெளிவரும் திங்களிதழ். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கிளர்ந்து எழுந்து வழிகாட்டுகிற உயரிய திங்களிதழ். இதழ் கட்டுரைகள் நுட்பமானவையாக இருக்கும். இரட்டை நாற்காலிச் சண்டை, சா.ராசநாயகம் நேர்காணல், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, காமம் பொய் வீடியோசுருள் என சாயிபாபா பற்றிய விளக்கக் கட்டுரை, விளையாட்டில் மறைந்திருக்கும் அரசியல், அர்ச்சராகும் திட்டம் பற்றி அ.மார்க்ஸ், அரபு இலக்கியம் பற்றிய செய்தி, சிறுகதை, நூல் விமர்சனம், கவிதைகள் என மிகப் பெரிய அளவில் கருத்து விதைப்பதோடு - மக்களுக்கான வழிகாட்டுதலையும் இதழ் செய்து வருகிறதுமதுரையிலிருந்து தரமான ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளிவருகிற திங்களிதழ். வெகுஜன இதழ்கள்போலத் தோற்றமளித்தாலும் கருத்துச் செறிவில் சிறந்த சிற்றிதழாக இருக்கிறதுமதுரையிலிருந்து வெளிவருகிற தரமான இதழ். ஒடுக்கப்படுகிற மக்களுக்காக எழுதுவதும். மத அடிப்படையில் மக்களுக்கிடையே பிண்ணப்படுகிற சதி வலையையும் காட்டுகிற இதழிது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,