சென்னை 73 - கவுரிவாக்கத்திலிருந்து பரணிப் பாவலன் வெளியிடுகிற திங்கள் இதழ் இது. எழுக எழுக தமிழனே - இனி, எண்திசை வெல்வாய் மறவனே - எனத் தலைப்பிலிட்டு, தமிழ்க் கலை இலக்கியத் திங்களிதழ் எனக் குறிப்பிட்டு வெளிவருகிற இதழ் இது. மே திங்களில் வெளிவந்துள்ள இந்த இதழ் இரண்டாவது ஆண்டின் மூன்றாவது இதழ். தரமான இதழ்கள் வரிசையில் இதுவும் காலம் கடந்து பேசப்படும். சென்ற வாரம்தான் இந்த இதழின் 8 இதழ்கள் தொகுப்பாக வந்தன. ஒவ்வொரு இதழும் நுட்பம் காட்டியது. எப்படி ஒரு சிற்றிதழ் தரமாக கருத்துச் செறிவுடன் இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாதாரமாக இந்த இதழ் உள்ளது. இதழில் தரமான மரபுப் பாடல்கள் உள்ளன. இதழின் ஒவ்வொரு கட்டுரையும் தமிழ், தமிழர், தமிழ்நாடு நோக்கிய வரலாற்றுப் பதிவாக உள்ளது. தமிழர்களுக்கான பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் வரிசைப் படுத்துகிறது, இத்தனை நாள்கள் இந்த இதழைப் பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தமே மேலிடுகிறது. அனைத்து இதழ்களையும் தொகுப்பாகப் பாதுகாக்க வேண்டிய தன்மையில் இதழ் உள்ளது. இதழ் தொடர வாழ்த்துகள் - பொள்ளாச்சி நசன் -தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,