பெங்களூரிலிருந்து வெளிவருகிற திங்களிதழ். தமிழ்த் திங்களை இதழில் குறிப்பிட்டு, தமிழுணர்வுத் துணுக்குகளை இணைத்து, 80 களில் வெளிவந்த சுட்டி இதழைப் போன்ற வடிவில் மிகச் சிறப்பாக வெளிவருகிற இதழ் இது. படிக்கத் தெரிந்த நம் மக்களுக்கு எதைப் படிக்கத் தருவது? எது தமிழுணர்வோடு உயர்த்தும் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த இதழ் வந்தது. பூ இதழ் தொடக்க இதழாக இருந்து மிகத் தரமாக மக்களைத் தமிழுணர்வோடு வளர்த்தெடுக்கும். இது நான்காவது இதழ். இதழ்க் குழுவினர் தொடர்ந்து வெளியிட்டுக் கருத்து விதைக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறோம். தொடர வாழ்த்துகிறோம்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,