தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் திங்களிதழாக வெளிவருகிற செய்தி இதழ். இதழில் பெற்றோர் ஆசிரியர் கழகச் செய்திகளை மட்டும் வெளியிடாது, தரமான தமிழியச் செய்திகளையும் வெளியிடுவது வாழ்த்துதற்குரியது. இநத இதழில் தமிழின் மேன்மையை ஆங்கிலத்தில் படைத்த அறிஞர் மு.சு.பூரணலிங்கம் பற்றி குறிப்பினையும், அட்டையில் அவரது படத்தினையும் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.க.பரமசிவன், தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கா.மாரியப்பன் ஆகியோரது கல்வி முன்னேற்றச் செயற்பாடுகளையும் இதழில் வெளியிட்டுள்ளது. இணையவழிக் கற்றலுக்கு வழிகாட்டுவதும் சிறப்பாக உள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,