2006 செப்டம்பரில் தொடங்கப்பட்டுள்ள முதல் இதழ். 274 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14 லிருந்து வெளிவருகிறது. ஆசிரியர் ஜி.சுப்பிரமணியம். மனித உரிமை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற கருத்துகளை முதன்மைப்படுத்தி வெளிவரும் இதழ். ஆங்கிலம் தமிழ் என இருமொழிகளில் கட்டுரைகளையும், குறிப்புகளையும், விளக்கங்களையும், சட்ட நுணுக்கங்களையும் வெளியிடுவது. அறியாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டி மனிதம் காண விழைவது. உலக அளவிலான மனித உரிமைகள், நசுக்கப்படும் மனித உரிமைகள், அதற்கெதிரான எழுச்சிகள், வழிமுறைகள் என வழிகாட்டுவது. தமிழக மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி அ.ச.வெங்கடாசலமூர்த்தி வழிகாட்டுதலில், அ.ர.செல்வக்குமார், க.மாரியப்பன், ச.பரமசிவம் என்கிற உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் செயற்பாட்டில் மனிதம் தழைக்க வாழ்த்துகிறோம்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,