மதிப்பு. மனித உரிமை மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு - என்கிற இலக்குகளைத் தலைப்பிலிட்டு, மே 2007 இல் வெளிவந்துள்ள முதல் இதழ் இது. மிகத் தரமான ஆசிரியர் குழு மற்றும் இயங்கிக் கொண்டிருக்கிற திருமிகு சுப்பிரமணியன் அவர்களது முயற்சியில் சென்னையிலிருந்து, மனிதம் அமைப்பின் சார்பில் வெளிவந்துள்ள இதழ் இது. கோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கு முன் தண்டனை, ஈழப்போரில் வான் புலிகள், கைது செய்யும்போது காவல் துறை கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், வரலாற்றுப் பக்கம், மெய்யியல் பார்வை, பயிரை மேயும் வேலிகள், சந்திப்பு, குறும்பட விமர்சனங்கள், நிகழ்வுகள் - என நுட்பமாக, மூளைச் செறிவேற்றுகிற கருத்துகள் அடங்கிய இதழ் இது. இணைய தளத்திலும் இந்த இதழ் இருக்கிறது. www.manitham.net/mathippu - கட்டுரைகள் செறிவாக உள்ளன. குறும்படங்கள் பற்றிய நுட்பமான விமர்சனங்களும் உள்ளன.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,