மீண்டும் கவிக் கொண்டல் - ஒவ்வொரு திங்களும் வெண்பா போட்டி, நடப்பியல் கட்டுரை - நடப்பியலை தான் வாழ்ந்த காலத்திலிருந்து பொருத்திப்பார்த்து எழுதும் கட்டுரை, தமிழுணர்வை வளர்த்தெடுக்கும் கட்டுரைகள் எனத் தொடர்ந்து வருவது.மீண்டும் கவிக்கொண்டல் : 13 ஆவது ஆண்டின் இரண்டாவது இதழ். மரபுப்பாக்கள் கட்டுரைகள் எனத் தரமாகத் தருகிற இதழ்.மா. செங்குட்டுவன் 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடுகிற திங்களிதழ். பல ஆண்டுகளாக இதழியல்துறையில் பட்டறிவும் படைப்பாளர்களிடையே நட்பும் உடைய இவரது இதழின் படைப்புகள் சிறப்பாகவே இருக்கும். இந்த இதழின் அட்டையில் திரு,வி,க அவர்களது படத்தை வெளியிட்டு உள்ளே அவர் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது. வெண்பா விருந்து என மரபுப் பாவலர்களை எழுத வைத்து இதழில் வெளியிட்டு வருகிறது. 14/ 3 பீட்டர்சு காலனி, இராயப்பேட்டை, சென்னை 14மரபுப்பா, குறிப்பு, துணுக்கு எனச் சுவையாக வெளியிடுவது. ஆசிரியரின் நினைவலைகளிலிருந்து எழுதப்படுகிற தமிழக வரலாற்று நிகழ்வுக் குறிப்புகள் உண்மைத் தன்மையுடன் ஈர்ப்புடன் இருக்கும். இந்த இதழில் ஞானபீட விருது பற்றி ஆசிரியர் கருத்துரைத்துள்ளார்.மீண்டும் கவிக்கொண்டல் இதழின் பொங்கல் சிறப்பு மலர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,