திருச்சி, உறையூரிலிருந்து வெளிவருகிற சித்த மருத்துவத் திங்களிதழ். சித்தர்கள் பற்றிய குறிப்பையும், மாதம் ஒரு மூலிகை என மூலிகை பற்றியும் தொடராக வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் யூகிமுனி பற்றியும், சிறுகுறிஞ்சா பற்றியும் உள்ளது. இந்த இதழில் கற்பிணிப்பெண்கள் பாதுகாப்பு பற்றிய குறிப்பினை வெளியிட்டுள்ளது. அஞ்சல் வழிக் கல்வியாக மூலிகை பற்றி நடத்துவது இந்த இதழின் சிறப்பு. மார்ச் 2006 இதழில் இரத்தச் சுற்றோட்டம், உணவு மண்டலம், நரம்பு மண்டலம், சிறுநீரக மண்டலம் பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. சுவைகளும், குணங்களும் என வெளியிட்டுள்ள அட்டை பயனாகுவதே.மூலிகை சஞ்சீவி. மூலிகையின் பயன்பாடு பற்றியும், மருந்துப் பொருளாக ஆக்குகிற செயல்முறை பற்றியும் விளக்குகிற இதழ். இதழ் வழியாக மூலிகைப் பயிற்சியும் நடத்துகிறது. வீரப்பன் இருந்த வரை காட்டில் யாரும் நுழையாது இருந்ததால் மூலிகைகள் காப்பாற்றப்பட்டன என்றும், வீரப்பனின் இறப்பிற்குப் பிறகு காட்டு வளங்கள் அழிக்கப்படுகின்றன எனவும் எழுதியுள்ள குறிப்பு உணரப்படவேண்டிய ஒன்றே.மூலிகை சஞ்சீவி: பதிப்பாசிரியர் : சி.ஜெகந்நாதன், மூலிகைச் செய்திகளைத் தரமாக இதழில் தருவதோடு, அஞசல் வழிப் பாடங்களை நடத்தி மூலிகை பற்றிய விழிப்புணர்வை ஆக்குகிற தரமான இதழ். தமிழகத்தில் பரவிக்கிடக்கிற இந்த மூலிகைகளை முறையாகக் கற்று, மருந்தாக்கிப் பயன்படுத்த அன்போடு வேண்டுவது : அந்தியோதயா சங்கம், திருச்சி 3


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,