1985 களில் புதிய படைப்பாளிகளுக்கு அடித்தளமாக இருந்து வளர்த்தெடுத்த பெருமை சிவகாசியைச் சார்ந்த வாரமுரசுக்கு உண்டு. பல்வேறு சூழல்களால் வெளிவராமல் நின்றிருந்த வாரமுரசு தற்பொழுது வெளிவந்திருப்பது மகிழ்வாக இருக்கிறது. இந்த விடுதலை நாளிலிருந்து இதழ் தொடரும் என்று நம்புகிறோம். இதழ் வணிக நோக்கமின்றி கதை, கட்டுரை, கவிதை எனப் பல்சுவைப் படைப்புகளைத் தாங்கி வந்துள்ளது. பின் அட்டையில் கவிஞர்களின் படங்கள் அணிவகுக்கின்றன. எட்டு பக்கங்களில் வந்தாலும் இதழ் தொடர்ந்து வந்து படைப்பாளிகளைச் செழுமைப்படுத்த வாழ்த்துகிறோம்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,