ஸ்பைசஸ் இந்தியா. அ.பெ.எண்: 2277 கொச்சியிலிருந்து அரசுத் துறையான வாசனைப் பொருள்கள் ஆக்ககம் (spices board) அமைப்பின் தொடர்பு இதழாக, இந்திய வாசனைப் பொருள்களின் வேளாண் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்காக இலவசமாக வெளியிடுகிற திங்களிதழ் இது. இந்த இதழில் பெருங்காயம் பற்றிய செய்திகளைச் சிறப்பாகத் தந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை இதுவரை எங்குமே படித்ததில்லை. ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், வேளாண் தொழிலுக்கான பல்வேறு நுணுக்கங்களையும் இதழில் குறிப்பிட்டு வருகிறது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,