இலண்டனிலிருந்து வெளிவருகிற இதழ். கலை இலக்கிய அரசியல் சமூக இதழ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இலண்டனில் நடந்த இசை விழா பற்றிய சிறப்பு மலராக இந்த இதழ் மலர்ந்துள்ளது. கோலாலம்பூரில் நடந்த முதலாவது உலக சித்தர் நெறி மாநாடு பற்றிய குறிப்பும் உள்ளது. இந்த இதழில் வானளாவிய சாதனையில் ஈழத்தமிழர், பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம், ஈழத்து நாடக மேதை வைரமுத்து காரை சுந்தரம்பிள்ளை, தியாகம் சிறுகதை, சங்கத் தமிழர் இசையில் யாழ், வானொலி மாமா அமரர் வி.இராசையா, தமிழ் சினிமாவின் வரலாறு, பாரதப் போரில் தமிழரின் பங்கு - என்கிற கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது.இலண்டனிலிருந்து வெளிவருகிற கலை இலக்கிய அரசியல் சமூக இதழ். இந்த இதழ் எண் சுடர் 4, ஒளி 13. புரட்டாசி ஐப்பசி 2006. கெளரவ ஆசிரியர் சி.சரவணபவன், ஆசிரியர்கள் பொன்.பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன். Chuderoli Publication Society. 15 Rutland road. London E7 8PQ, United Kingdom முகவரியிலிருந்து இதழ் வெளிவருகிறது. தமிழகப் பொறுப்பாளர் இரா.மதிவாணன், சென்னை. 48 பக்கங்களில் தரமான தாளில் இதழ் அச்சாகியுள்ளது. தீர்வின் எல்லையில் ஈழத் தமிழர்கள் என்ற பார்வை சரியானதே. மலையக மனிதர்கள் தெளிவத்தை ஜோசப், தமிழ்த்தந்த தாதாக்கள், ஈழத்து நாடகமேதை வைரமுத்து, சத்தியதரிசனம் - சிற்பியின் சிறுகதை, உலகத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்கள், புலிகள் எம்ஜிஆர்..கலைஞர்..வைகோ..,யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நூல் வெளியிடு, உலகத் தமிழர் பேரமைப்பின் சேலம் மாநாடு, சோனியா காந்திக்குக் கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள், யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம், ஈழம் பிரபாகரனுடன் ஒருநாள் - பாரதிராஜா, கொழும்பு தமிழ்ச் சங்க தேர்வு முடிவுகள், புலவர் வே.அகிலேசப்பிள்ளை, என்கிற தலைப்பில் மிக நுட்பமான படைப்பாக்கங்களைக் கொண்டுள்ளது இதழ்.இலண்டனிலிருந்து வெளிவருவதாகத் தமிழகத்திலிருந்து அச்சாகி வெளிவருகிற கலை, இலக்கிய, அரசியல், சமூக, இருமாத இதழ் இது. தமிழகத்துப் படைப்பாளிகள் பலரையும் இணைத்து, தமிழகத்துச் செய்திகளையும் இணைத்து இதழை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் சர்வதேச நோக்கும் தமிழர் போராட்டமும் என சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நேர்காணல் கொடுத்துள்ளார். ஐ.தி.சம்பந்தன் அவர்கள் சிங்களப் பேரினவாதம் நாடு பிரிவதற்கு வழி வகுக்கிறதா என்ற வினாக் கட்டுரையை எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறு வரிசையில் ஈழத்து நாடகமேதை வைரமுத்துப் பிள்ளை அவர்களது குறிப்பு இடம் பெற்றுள்ளது. புலமை இதழில் வெளியான தனிநாயக அடிகள் பற்றிய செய்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் வெளியிட்ட செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் நூல் பற்றிய நிகழ்வுக் குறிப்பும் இதழில் உள்ளது. ஜெர்மெனியின் சிவத்தமிழ் இதழ் பற்றிய குறிப்பும் உள்ளது.இலண்டனிலிருந்து இருமாத இதழாக வெளிவருகிற கலை, இலக்கிய, சமூக, அரசியல் இதழ். இது நான்காவது ஆண்டின் பத்தாவது இதழ். ஆசிரியர்கள் பொன் பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன், தமிழகத்தில் உலகத் தமிழர் பதிப்பகம் இந்த இதழை அச்சாக்கி வருகிறது. தமிழ் தந்த தாதாக்கள், அந்தனி ஜீவா பற்றிய கட்டுரை, வாயும் நாவும் எதற்கு?, தமிழர் வாழ்வு வளம் பெற வழிகள், தாயகத்துப் படைப்பாளர்களுக்கு உதவவேண்டும், பொன் பாலாவின் சோழியன் குடுமி, தந்தை செல்வா உரை, சிவயோகம் முத்தமிழ் விழா - எனக் கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளது.இலண்டனிலிருந்து சி.சரவணபவன் சிறப்பு ஆசிரியராகவும், ஆசிரியர்கள் பொன்.பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன் நெறிப்படுத்துதலிலும் இதழ் வெளிவருகிறது. கலை இலக்கிய அரசியல் சமூக இதழ் என்று தலைப்பிலிட்டு இதழ் வெளிவருகிறது. இதழிலுள்ள கட்டுரைகள் நுட்பமானவை. தமிழக மற்றும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்பாக்கங்களோடு இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழ் நான்காமாண்டின் ஒன்பதாவது இதழ். இந்த இதழில் பிரித்தானியப் பிரதமரின் பரதநாட்டிய ஆர்வம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்காக்க என்ற காசி ஆனந்தனின் உரைச்சித்திரம் உள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 2 ஆவது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா பற்றிய புகைப்படக் காட்சியும் உள்ளது. வைத்திய நூல் பற்றிய கட்டுரையும் உள்ளது. அரு.கோபாலன் அவர்களது பொங்கல் கட்டுரை பயனாகுவதே. ஐ.பி.சி யில் சுடரொளி பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒலிபரப்பியதைக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,